Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.. மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை.. தனுஷ் பட நடிகர் உருக்கம்!
சென்னை: தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகரான காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் காளி வெங்கட். 40க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
ஆலியா, ரன்பீரோட வேலை செய்யறது ரொம்ப உற்சாகமா இருக்கு... நாகார்ஜூனா மகிழ்ச்சி
விஜயின் மெர்சல்,தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் தனுஷுடன் மாரி 2, கொடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சிம்புவுடன் ஈஸ்வரன்
சூர்யாவின் சூரரைப்போற்று சிவகார்த்திகேயன் வேலைக்காரன், ஜெயம் ரவியின் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் காளி வெங்கட்.

அனைத்து அறிகுறிகளும்
அந்த வீடியோவில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார் நடிகர் காளி வெங்கட். மூச்சு திணறல், இருமல் என அனைத்து அறிகுறிகளும் இருந்து சிக்கலான நிலையில் இருந்து மீண்டதாக கூறியுள்ளார்.

ரமேஷ் திலக் சொன்னதால்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ரமேஷ் திலக் திட்டியதால் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.
#COVIDEmergencyIndia #experience pic.twitter.com/GIDWnUxInB
— Kaali Venkat (kaaliactor) May 25, 2021
சிக்கலான நிலையில்
22 நாட்கள் அறிகுறிகள் இருந்தன. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன்.அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க, அட்மிட் ஆகனும்னு போனா மருத்துவமனையில் இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது.

அலட்சியமா இருக்காதீங்க
டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதனால வராம பாதுகாத்துக்குங்க, சேஃப்பா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. மருத்துவர் சொல்றத கேளுங்க. இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.