டீயில எச்சில் துப்பி கொடுப்பாரே.. அந்த நடிகரா இவர்? காதலியை கரம் பிடித்த காதல் பட நடிகர்!

சென்னை: காதல் பட நடிகர் தனது பல ஆண்டு காதலியை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் காதல். இந்தப் படத்தில் பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது இப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

காதல் கணவரை பிரிந்து

காதல் கணவரை பிரிந்து

வசதியான வீட்டு பெண்ணான சந்தியா, மெக்கானிக்கை காதலித்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வார். பின்னர் பெற்றோரின் கட்டாயத்தால் காதல் கணவரை பிரிந்துவிடுவார் சந்தியா.

பைத்தியமாகும் காதல் கணவர்

பைத்தியமாகும் காதல் கணவர்

காதலனாக முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த பரத் காதல் மனைவி பிரிந்த துக்கத்தில் பைத்தியமாகி விடுவார். இந்தப் படம் அந்த கால கட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டீயில் எச்சில் துப்பி கொடுப்பார்

டீயில் எச்சில் துப்பி கொடுப்பார்

இந்நிலையில் மெக்கானிக் ஷாப்பில் பரத்துக்கு அசிஸ்ட்டன்ட்டாக நடித்திருந்தவர் அருண் குமார். குட்டிப் பையனாக நடித்திருந்தார் அருண் குமார். படத்தில் டி வாங்கி வரும் அருண் குமார் டீயில் எச்சிலை துப்பி கொடுப்பார்.

விஜய்யின் சிவகாசி படத்திலும்

விஜய்யின் சிவகாசி படத்திலும்

அந்த காமெடி பெரும் ஹிட்டானது. பரத்துக்கும் ஐடியா கொடுப்பார் அருண் குமார். அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட சில படங்களிலும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

காதலியை கரம் பிடித்த அருண்

காதலியை கரம் பிடித்த அருண்

சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X