3 வருஷமா ஏமாத்திட்டாரு.. துணை நடிகை குமுறல்.. காவல் நிலையத்தில் ஆஜரான காதல் சுகுமார்!
சென்னை: மூன்று வருடமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் குடித்தனம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றுவதாக துணை நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காதல் சுகுமார் காவல் நிலையத்தில் ஆஜராகி, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான காதல் சுகுமார். பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் பரத்தின் நண்பனாக நடித்து பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படத்தில் நடித்தார். பின் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

நடிகர் காதல் சுகுமார்: அண்மையில் கவின் நடித்த ஸ்டார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அந்த படம் என்னுடைய பயோபிக் என்றும், நானும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஸ்டார் படத்தை தொடர்ந்து, தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான டப்பாங்குத்து படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. தற்போது, காதல் சுகுமார், 'வெற்றி வேலப்பர்' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஏமாற்றிவிட்டார்: இந்நிலையில், துணை நடிகை ஒருவர், காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று வருடமாக ஏமாற்றிவிட்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வடபழனியைச் சேர்ந்த துணை நடிகை ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாகவும். அப்போது தான், காதல் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்ததாகவும், அப்போது, சுகுமார், தனக்கு திருமணமானதை மறைத்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகளாக பழகி வந்தார். அவருக்கு படவாய்ப்பு இல்லாத போது, நான் பணம் மற்றும் நகைகளை கொடுத்து உதவி செய்தேன்.
காவல் நிலையத்தில் ஆஜர்: ஆனால் தற்போது, சுகுமார் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டு, என், தொலைபேசி எண்ணை பிளாக்கில் போட்டுவிட்டார் என்று புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார், காதல் சுகுமாரை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தில் ஆஜரான சுகுமார், பட வாய்ப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும், துணை நடிகையை ஏமாற்றி நகையோ பணமோ எதுவும் வாங்கவில்லை என கூறினார். இதைத்தொடர்ந்து, துணை நடிகை, நகையை அடகு வைக்க நானும் சுகுமாரும் தான் சென்றோம், அடகு வைத்துத்தான் அவருக்கு பணத்தை வாங்கி கொடுத்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் அந்த அடகு கடையின் சிசிடிவி காட்சியில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











