ஏற்கனவே 2 பேரு.. சாதிய புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க.. நடிகர் காதல் சுகுமார்!

சென்னை: காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சுகுமார், காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர். காதல், உணர்ச்சி, சமூகத் தடைகள், குடும்ப விரோதம் போன்ற விஷயங்களை மையமாகக் கொண்ட அந்த படம் அந்நேரத்தில் இளைஞர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் சுகுமாரின் இயற்கையான நடிப்பு அவரை ரசிகர்களின் இதயத்தில் நிலையாக பதிய வைத்தது. தற்போது இவர் சாதிய படங்கள் குறித்து பேசிய கருத்து இணையத்தில் பெரும் விவாதமாக மாறி உள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் 'திரெளபதி'. 2020ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், சாதியவாதம் தொடர்பான சர்ச்சையை கிளப்பியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில், இப்படத்தின் "எம்கோனே" இப்பாடலை பிரபல பாடகி சின்மயி பாடி இருந்தார்.சாதியவாதம் பேசும் மோகன் ஜி படத்தில் பாடியது என் எதிர்மறை விமர்சனங்கள் வந்தநிலையில், சின்மயி அது மோகன்ஜியின் படம் என தெரியாமல் பாடிவிட்டேன் என மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Kadhal Sukumar Mari selvaraj Mogan G

திரௌபதி 2 சர்ச்சை: இதைத்தொடர்ந்து இயக்குநர் ஜி மோகன், மாற்று சிந்தாந்தம் கொள்கை கொண்டவர்களுக்கு நான் பாட மாட்டேன் என சின்மயி அறிவித்து இருந்தால், நான் அவரை பாட அழைத்து இருக்க மாட்டேன். எதற்காக நீங்கள் வருத்தம் தெரிவித்தீர்கள். யார் கொடுத்த அழுத்தத்தால், நீங்கள் இந்த மன்னிப்பு கேட்டீர்கள் என்பதை விளக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என மோகன் ஜி வீடியோ மூலம் சின்மயிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

சாதியை புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க: இந்த பிரச்சனை இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் நிலையில், காதல் சுகுமார் அளித்துள்ள பேட்டியில், சாதியை வைத்து படம் எடுத்தால் இன்னைக்கு எல்லாரும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறாங்க, இதனால், சாதியை மையமாக வைத்து படத்தை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, அந்த இடத்தை ஏற்கனவே ரெண்டு பேர் புடிச்சி தொங்கிகிட்டு இருக்காங்க. அத பாத்துவிட்டு புதுசு புதுசா இயக்குநர்கள் வருகிறார்கள். சாதி என்பது ஜட்டி மாதிரி நாம போட்டுக்கலாம். ஆனால், வெளியே காட்ட கூடாது. சாதியையும் பிளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது. ஆனால், பயன்படுத்துவதை தவிக்கலாம் என காதல் சுகுமார் பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

நடிகர் காதல் சுமார், சிம்புவுடன் காதல் அழிவதில்லை, கமல்ஹாசனின் விருமாண்டி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என 50க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிகர் மட்டுமில்லாமல், திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X