ராகுலை சந்தித்த பிரபல நடிகர்… இப்போது சீரியல் நடிகையுடன் இணைகிறார்…!

கலையரசன் அடுத்ததாக காசிமேடு திரைப்படத்தில் நடிக்கிறார்

Recommended Video

மெட்ராஸ் பட புகழ் கலையரசனுக்கு ஜோடியாகும் வாணி போஜன்- வீடியோ

சென்னை: நடிகர் கலையரசன் அடுத்ததாக காசிமேடு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கலையரசன். உறுமீன், டார்லிங் 2, அதே கண்கள், கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Actor kalaiyarasan to act with Serial actress!

இப்போது காதலும் கவுந்து போகும், அர்ஜுனன் காதலி, களவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகன், நண்பன் அல்லது சில முக்கிய வேடங்கள் என்று நடிகனாக நிலைநிறுத்திக்கொள்ள விரும்பும் ஒரு நடிகர் என்று சொல்லலாம். சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித்துடன் கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இவர் இப்போது காசிமேடு என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லோகேஷ் இயக்கத்தில் சின்னத்திரை நடிகையான வானி போஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கலையரசன் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு வேறு சில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் லோகேஷ் முயன்றாராம். ஆனால் அவர்கள் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும்படி கேட்டுள்ளனர்.

ஆனால் கலையரசன் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு அவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பிசாசு, துப்பறிவாளன் படங்களுக்கு இசையமைத்த ஆரால் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X