பாக்ஸரின் மேனரிஷம் வர… நான் கடுமையாக உழைத்தேன்… கலையரசனின் சுவாரசியமான தகவல்!

சென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.

Recommended Video

Sarpatta shootingல Ranjith இப்படி தான் இருப்பாரு | Vembhuli, Vetri, Raman

அப்படத்தில் பாக்ஸராக நடித்துள்ள கலையரசன், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பொதுவா பாக்ஸர்களுக்கு என்று ஒரு மேனரிஷம் இருக்கும் அது வருவதற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கலையரசன் கூறினார்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன. இதில் சர்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் தோற்றுவிட்டால் சர்பட்டா பரம்பரை இனி சண்டையே போடாக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே சர்ப்பட்ட பரம்பரை சுவாரசியமான கதை, இதை அழகாக திரையில் கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார் பா.ரஞ்சித். இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

பாராட்டும் நடிப்பு

பாராட்டும் நடிப்பு

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா, பசுபதி ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. அவரது நடிப்பை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஆக்டிங் கிளாசுக்கு போ

ஆக்டிங் கிளாசுக்கு போ

இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து, குறித்து சுவாரசியமான தகவல் பகிர்ந்துள்ளார் நடிகர் கலையரசன், இயக்குனர் ரஞ்சித் எப்பவும் நீ நல்ல நடிச்சனு சொல்லவே மாட்டாரு இன்னும் நல்ல பண்ணுதான் எப்பவும் சொல்லுவாரு. இப்போ கூட, நடிப்பு ஒரே மாதிரி இருக்கக்கூடாது, நீ ஆக்டிங் கிளாச்சு போ, இன்னும் நம்ம எதாவது செய்யனும்னு எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு என்றார் கலையரசன்.

கஷ்டப்பட்டேன்

கஷ்டப்பட்டேன்

மேலும், சர்பட்ட பரம்பரை ஒரு வித்தியாசமான திரைப்படம், 1975ம் தொடர்பான கதை என்பதால் அதற்கு தகுந்த மாதிரி நடை உடை பாவனை அனைத்தையும் பற்றிக்கொண்டோம். பொதுவா பாக்ஸர்களுக்கு என்று மேனரிஷம் இருக்கும் அதுவருவதற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கலையரசன் கூறினார்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X