Kalidas Engagement: காளிதாஸ் ஜெயராமிற்கு விரைவில் டும்டும்டும்.. நீண்ட நாள் தோழியுடன் நிச்சயம்!

சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகராக காளிதாஸ் ஜெயராம் காணப்படுகிறார். இவர் தாரிணி காளிங்கராயர் என்ற பெண்ணை காதலிப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தார்.

Actor Kalidas Jayaram engaged with famous model Tarini Kalingarayar

இந்நிலையில் இவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

நடிகர் ஜெயராம்: நடிகர் ஜெயராம் தமிழ், மலையாள படங்களில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இவர் நடித்துள்ள தெனாலி, பஞ்சதந்திரம் படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்கள். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஜெயராம் நடித்திருந்தார். படத்தில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இவர் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகை பார்வதிக்கும் கடந்த 1992 ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

நடிகர் காளிதாஸ் ஜெயராம்: இவருக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கமலின் மகனாக இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நீண்ட வருடங்களாக தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வருகிறார். இவர் பிரபல மாடலாக உள்ளார்.

Actor Kalidas Jayaram engaged with famous model Tarini Kalingarayar

காளிதாஸ் நிச்சயதார்த்தம்: இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதன் கலர்புல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. விரைவில் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

7 வயதில் சினிமாவில் என்ட்ரி: மலையாளத்தில் கொச்சு கொச்சு என்ற படத்தின்மூலம் தன்னுடைய 7வது வயதிலேயே அறிமுகம் ஆனவர் காளிதாஸ் ஜெயராம். தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் வெளியான மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் காளிதாஸ். தொடர்ந்து பூமரம், நவரசா வெப் தொடர், பாவக்கதைகள் ஆந்தாலஜி, நட்சத்திரம் நகர்கிறது படம் என அடுத்தடுத்து மாஸ் காட்டியுள்ளார் காளிதாஸ் ஜெயராம்.

Actor Kalidas Jayaram engaged with famous model Tarini Kalingarayar

காளிதாஸ் -தாரிணி நிச்சயதார்த்தம்: இதேபோல தாரிணியும் பிரிட்டனில் பிரபல மாடலாக இருந்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ள தாரிணி, 2021ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் பங்கேற்றிருந்தார். அதிகமான விளம்பரங்களிலும நடித்துள்ளார். காளிதாசும் தாரிணியும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காளிதாஸ், தாரிணியை தான் திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X