காதலிப்பது உண்மைதான்.. நடிகர் காளிதாஸ் பளீச் பதில்..யார் அந்த காதலி!
சென்னை : நடிகர் ஜெயம்ரவியின் மகள் காளிதாஸ் ஜெயராம் காதலிப்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்து விருதுகளை பெற்றுள்ள காளிதாஸ். மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தந்தையை போல தானும் ஒரு சிறந்த நடிகன் என்பதை காளிதாஸ் ஜெயராம் நிரூபித்துள்ளார். மலையாளத்தை விட தமிழில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

காளிதாஸ் ஜெயராம்
காளிதாஸ் ஜெயராம், கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவக்கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உண்மையில் அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்து அனைவரின் மனதையும் வசப்படுத்தும் வகையில் நடித்திருப்பார்.

கமலின் மகனாக
அதன்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே காளிதாஸ் நடித்திருந்தாலும், கதைக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் காளிதாசுக்கு நல்ல பெயர் கிடைத்தது. தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் காளிதாஸ்.

காதல் கிசுகிசு
காளிதாஸ் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தனது காதலை உறுதிப்படுத்தும் வகையில் தனது காதலியின் மடியில் சாய்ந்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கல்யாணம் எப்போது என கேள்வி கேட்டு வருகின்றனர். சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிங்கே இன்று இதுதான்.

தோழியா..என் காதலியா?
ஓணம் பண்டிகையின் போது காளிதாஸ் குடும்ப போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பத்துடன் ஒரு இளம்பெண்ணும் இடம்பெற்றிருந்தார். அந்த பெண் காளிதாஸின் தோழி என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது காளிதாஸின் காதலி என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த பெண் மாடலிங் துறையை சேர்ந்த தாரிணி காளிங்கராயர் ஆவார்.


Click it and Unblock the Notifications











