சதார் கதாபாத்திரம் உருவாக இவர்கள்தான் காரணம்.. காளிதாஸ் ஜெயராம் வெளியிட்ட போட்டோ!

சென்னை : நான்கு முன்னணி இயக்குனர்களால் நான்கு வித்தியாசமான கதைகளைக் கொண்டு சமீபத்தில் வெளியாகி இருந்தது பாவ கதைகள் வெப் சீரிஸ்.

வெற்றிமாறன், சுதா கொங்கரா,விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கிய பாவ கதைகள் டிசம்பர் 18 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய சதார் கதாபாத்திரம் தத்ரூபமாக உருவாக உதவிய மிக முக்கிய நபர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2020இல் எக்கச்சக்கமான ஆந்தாலஜி திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் முன்னணி இயக்குனர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

கூட்டு முயற்சியில்

கூட்டு முயற்சியில்

ஆந்தாலஜி திரைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பாவ கதைகள் நான்கு வித்தியாசமான இயக்குனர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தனிச்சிறப்பு பெற்று

தனிச்சிறப்பு பெற்று

சமூகத்தில் நடக்கும் பல்வேறு பாவ அவலங்களை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த பாவ கதைகள் திரைப்படத்தில் வெற்றிமாறன், சுதா கொங்கரா,விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கி இருக்க அனைத்து பகுதிகளும் தனிச்சிறப்பு பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

காளிதாஸ் ஜெயராம்

காளிதாஸ் ஜெயராம்

இதில் சுதா கொங்கராவின் "தங்கம்" அனைவரையும் கண்கலங்க வைத்த நிலையில், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்கம் பகுதியை பாராட்டி இருந்தனர். காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ், பவானி ஸ்ரீ நடிப்பில் உருவான தங்கம் பகுதியில் அனைவரின் நடிப்பும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.

தத்ரூபமாக நடித்து

தத்ரூபமாக நடித்து

முதல் முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் உன்னதமான நடிப்பின் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்று தத்ரூபமாக நடித்து இருக்க திருநங்கைகள் இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அச்சுப் பிசகாமல் காட்டியிருக்கும் பல காட்சிகளில் அனைவரையும் அழ வைத்திருந்தார்.

திருநங்கை நடிகை ஜீவா

திருநங்கை நடிகை ஜீவா

இந்த நிலையில் தன்னுடைய திருநங்கை கதாபாத்திரமான சதார் உருவாக பெரும் உதவியாக இருந்த நபர்களான வருங்கால இயக்குனர் மாலினி மற்றும் திருநங்கை நடிகை ஜீவா ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சதார் கதாபாத்திரம் உருவாக இவர்கள் தான் முக்கிய காரணம் என தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். திருநங்கை நடிகை ஜீவா ஏற்கனவே தர்பார் திரைப்படத்தில் வரும் கண்ணுல திமிரு பாடலிலும், விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் நடித்திருப்பபார் என்பது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X