அதை மட்டும் பண்ணாத.. உன்னை கொன்னே போடுவேன்.. கீர்த்தி சுரேஷை மிரட்டிய சிவகார்த்திகேயன் ஜோடி!

கோவா: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆனாலும், அவரது கல்யாணத்தைச் பற்றிய பரபரப்பும் சுவாரஸ்யமும் குறைந்தபாடில்லை. கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிக் காலத்தில் இருந்து காதலித்து வந்த ஆண்டனி தட்டிலைத் திருமணம் செய்ய தனது பெற்றோர்களிடம் பெரும் போராட்டமே நடத்தியுள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 12ஆம் தேதி திருமணம் கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை பிரியதர்ஷினி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி தட்டிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் கொலை செய்துவிடுவேன் எனவும் செல்லமாக மிரட்டியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

கோவாவில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தென்னிந்திய திரைப் பிரபலங்கள் தொடங்கி, பாலிவுட் நட்சத்திரங்கள் வரை பெரும் நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டது. கீர்த்தி சுரேஷ் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், மலையாள திரையுலகினர் பலர் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

kalyani priyadarshan keerthy suresh wedding keerthy suresh

தமிழ் திரையுலகில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் இணைந்து தனியார் விமானத்தில் சென்றனர். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியானதால், இணையவாசிகள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷுக்கு முதலில் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் திருமணம் நடைபெற்று முடிந்த சில மணிநேரங்களில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையமே திரண்டு நின்று கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் தம்பதியரை வாழ்த்தினர்.

Kalyani Priyadarshan Keerthy Suresh Wedding Keerthy Suresh

கல்யாணி பிரியதர்ஷன்: அதேபோல், மறுநாள் அதாவது டிசம்பர் 13ஆம் தேதி கிருஸ்த்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. குறிப்பாக இருவரும் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் வேற லெவலில் ட்ரெண்ட் ஆனது. கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் தம்பதியரை பலரும் வாழ்த்தினர். குறிப்பாக, பள்ளிக் காலத்தில் பூத்த காதலை, திருமணம் வரை இத்தனை ஆண்டுகள் கொண்டுவந்ததற்காகவே வாழ்த்தினார்கள்.

Kalyani Priyadarshan Keerthy Suresh Wedding Keerthy Suresh

கொலை: இப்படியான நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்களது திருமணம் உங்களின் காதலைப் போலவே மிகவும் அழகாக இருந்தது. ஐ லவ் யூ, நீங்கள் திருமணம் செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களது, திருமணத்தில் இருவருமே மிகவும் அழகாக இருந்தீர்கள். உங்களது திருமணத்தில் நான் அழும் புகைப்படங்களை நீங்கள் ரிலீஸ் செய்தால் உங்களைக் கொன்றுவிடுவேன் என பேரன்போடு பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Kalyani Priyadarshan Keerthy Suresh Wedding Keerthy Suresh

ஷாக்: மேலும், என்னதான் இருந்தாலும் திருமணத்திற்கு வாழ்த்தும்போது இப்படி கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதைப் பார்த்து ரசிகர்களே கொஞ்சம் ஷாக்காகியுள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானர்.

Kalyani Priyadarshan Keerthy Suresh Wedding Keerthy Suresh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X