தொடங்கியது விக்ரம் ஷூட்டிங்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோல் நடிக்கும் கமல்? கசிந்தது முக்கிய தகவல்!

சென்னை: விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமலின் 232வது படமான இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

அப்போது வெளியான டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதன் மூலம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் கமலுடன் நடிப்பது உறுதியானது.

கமலின் கதாப்பாத்திரம்

கமலின் கதாப்பாத்திரம்

மேலும் படத்தில் அந்தோணி வர்கீஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் படத்தில் கமலின் கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

பார்வையற்றவராக..

பார்வையற்றவராக..

அதாவது நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பார்வையற்றவராக நடிப்பதாக கூறப்படுகிறது. பாதி படம் வரை பார்வையுடனும் பாதி படத்திற்கு மேல் பார்வையற்றவராகவும் நடிக்கிறாராம்.

30 ஆண்டுகளுக்கு பின்

30 ஆண்டுகளுக்கு பின்

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ராஜ பார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே போன்று நடிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X