'அட்வைஸ் கிங்' ஆரிக்கு அட்வைஸ் செய்த கமல்.. 'இதையெல்லாம்' கேட்கதாவங்களுக்கு கொடுக்காதீங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் அட்வைஸ் செய்வதை முதல் வேலையாக வைத்துள்ள நடிகர் கமல் ஹாசன் அட்வைஸ் செய்துள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் சக போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்வதையே தலையாய கடமையாக கொண்டுள்ளார் நடிகர் ஆரி.
கடந்த வாரமே ஆஜித்துக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்தார் ஆரி. அப்போதே, தான் சொன்ன அட்வைஸை அவர் கேட்கவில்லை, நான் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து போய்விட்டார் என்றார்.

பெரிய பஞ்சாயத்து
இருந்த போதும் தொடர்ந்து ஆஜித்துக்கு அட்வைஸ் கூறினார். ஆஜித்தின் எவிக்ஷன் ஃபிரி பாஸை எடுத்த போதும் அவர் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் ஆஜித். இதனால் ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்தது.

எவிக்ஷன் ஃபிரி பாஸ்
அந்த விவகாரத்தில் நிஷா கதறி அழுதார். ஜித்தன் ரமேஷ், ஆரி உள்ளிட்டோர் பேசிய பிறகு அவர்களிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார் நிஷா. அதன்பிறகே தன் கையால் ஆஜித்திடம் அவரது எவிக்ஷன் ஃபிரி பாஸை கொடுத்தார்.

அட்வைஸ் கேட்கமாட்டேன்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆரியிடம் அதுகுறித்து பேசிய கமல், நான் யார் அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டேன். ஆனால் மற்றவர்களுக்கு நன்றாக அட்வைஸ் செய்வேன். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா என்றார்.

கேட்காதவர்களுக்கு வேண்டாம்
நிச்சயமாக சார் என்று எழுந்து நின்றார் ஆரி. இவ்ளோ பவ்யமாக இருந்தால் எவ்ளோ வேண்டுமானாலும் அட்வைஸ் பண்ணலாம் என கூறி, கடன், கிரெடிட் கார்டு, அறிவுரை ஆகியவற்றை கேட்காதவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார் கமல்.

சேஃபர் ஜோன்
ஏனென்றால் அவர்கள் கேட்காமல் போய்விட்டால் நமக்கு தான் மனசு கஷ்டப்படும் என்றும் கூறினார். மேலும் இன்னும் நீங்கள் சேஃபர் ஜோனை விட்டு வெளியே வரவில்லை என நினைக்கிறார்கள் என விர்ட்சுவல் ஆடியன்ஸை கையை காட்டினார். இப்படியாக அட்வைஸ் சொல்வதை நிறுத்து என இன்டைரக்ட்டாக ஆரிக்கு அட்வைஸ் கூறினார் கமல்.


Click it and Unblock the Notifications