திடீர் காய்ச்சல்..நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக படபிடிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில் சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக முழு உடல் பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 68 வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்

68 வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஐ கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அழகாக கோட்டு சூட்டில் கமல் வந்து நிகழ்ச்சியை வழங்கினார். அப்போது நுணுக்கமாக சில விஷயங்களை அவர் பாணியில் கேட்டு அதற்கு உரிய அறிவுரைகளையும் கமல் வழங்கினார்.

இந்தியன் 2, மணிரத்னம் படம் ஷூட்டிங்

இந்தியன் 2, மணிரத்னம் படம் ஷூட்டிங்

தற்போது இந்தியன் 2 படத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொண்டு வருகிறார். கமல்ஹாசன், அடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதில் மணி ரத்ம்னம் இயக்கத்தில் ஒரு படமும் உண்டு. சமீபத்தில் அவர் ஐதராபாத் சென்று வந்தார்.

சளி காய்ச்சலால் படபிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் மருத்துவ பரிசோதனை

சளி காய்ச்சலால் படபிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதால் மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக மருத்துவரை பார்த்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் இது தொடர்ந்தால் படபிடிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதால் உடல் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளார்.

போரூர் மருத்துவமனையில் அனுமதி

போரூர் மருத்துவமனையில் அனுமதி

இதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேற்று இரவு கமல் சென்றார். இங்கு சளி, காய்ச்சலுக்காக உடல் பரிசோதனையும், வேறு ஏதாவது பிரச்சினை இருக்க வாய்ப்பிருந்தால் அதையும் பரிசோதனை செய்துக்கொள்ள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

மன உறுதிமிக்க கமல்

மன உறுதிமிக்க கமல்

இன்று காலை முழு உடல் பரிசோதனைக்கு பின் தேவையெனில் ஓய்வு எடுக்கலாம், அல்லது இன்றே வீடு திரும்பலாம் என தெரிகிறது. கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம் கொரோனா தாக்குதலின்போதே மருத்துவமனையிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நடத்தியதாக சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார். ஆகவே அவரது மன உறுதி முன் அனைத்தும் எளிதாக நடக்கும், எனவே இது சாதாரண காய்ச்சலுக்கான பரிச்சோதனைக்கான அனுமதியே என அவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X