Kamal haasan: இந்த கோப்பை சிஎஸ்கேவிற்குதான்.. அப்ப விராட்.. கிரிக்கெட் லைவில் கமல் பேசிய பேச்சு!
மும்பை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாகம் வெளியான சூழலில் தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக படக் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் காட்சியின் சூட்டிங் மீதம் உள்ளதாகவும் அதனால் ஜூலை மாதத்திற்கு இந்த படத்தின் சூட்டிங் தள்ளி போவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை தற்போதே படக்குழுவினர் துவங்கியுள்ளனர். கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் இன்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் லைவ்வில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்காக இணைந்து படம் குறித்தும் இன்றைய போட்டி குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். காஜல் அகர்வால். ரகுல் பிரீத் சிங். சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை மாதத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் கமல் மீண்டும் மிரட்டியுள்ளார். 38 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டடித்தது.
நடிகர் கமல்ஹாசன்: இந்த படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என அப்பா - மகன் கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர்களுக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். இந்த காம்பினேஷன் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகத்திற்கான ஷூட்டிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கப்பட்டு இடையில் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. முன்னதாக படம் ஜூன் மாதத்திலேயே ரிலீசாக உள்ளதாக லைகா அறிவித்திருந்தது.
தள்ளிப்போன ரிலீஸ்: இந்நிலையில் ஒரு பாடல் காட்சியின் சூட்டின் மீதம் உள்ளதால் படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் இன்றைய தினம் துவங்கியுள்ளனர். இன்றைய தினம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஐபிஎல் போட்டிக்கான லைவ் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் இணைந்து பேசினர். இதில் படத்தின் ரிலீஸ் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். படம் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் லைவில் பேசிய கமல் & ஷங்கர்: இந்நிலையில் இன்றைய தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளதை ஒட்டி கமல்ஹாசன் பேசினார். அதில் தன்னுடைய ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குதான் என்று அவர் குறிப்பிட்டார். மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று பெயர் மாற்றம் செய்து அழகு பார்த்த தலைமுறை தங்களுடையது என்று அவர் பெருமை தெரிவித்தார். சென்னை என்ற பெயர் புழக்கத்தில் வருமா என்று காத்திருந்த காலக்கட்டத்தை குறிப்பிட்ட கமல்ஹாசன். தற்போது சென்னை கிங்சே வந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த முறை கோப்பையை வெல்லும் என்று அவர் கூறினார்.
கோப்பை சிஎஸ்கேவிற்கே: தன்னுடைய ஆதரவு சிஎஸ்கேவிற்கு தான் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் விராட் கோலி பல்வேறு சாதனைகளையும் மேற்கொண்டு வரும் சூழலில் அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லட்டும் என்றும் இந்த கோப்பை தங்களுடையது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு சிஎஸ்கே ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களையும் சேர்த்து சந்தோஷம் மற்றும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











