Indian 2 movie :பிரிட்டிஷ் பீரியட் லுக்கில் ட்ரெயின் ஆக்ஷன் காட்சி.. இந்தியன் 2 படத்தின் மாஸ் சூட்டிங்!

ஜோகன்ஸ்பர்க் : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தைவானில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Actor Kamal haasan and Indian 2 movie team planned for British period train action sequence

கமல்ஹாசனின் இந்தியன் 2 சூட்டிங் : நடிகர் கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தைவானில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றன. இந்த சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட கமல் மற்றும் ஷங்கரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தற்போது படத்தின் சூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டில்தான் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கியது. தொடர்ந்து சில மாதங்கள் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், விபத்து உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 4 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

Actor Kamal haasan and Indian 2 movie team planned for British period train action sequence

இதனிடையே ராம்சரணின் படத்தையும் இயக்குநர் ஷங்கர் இயக்கிய நிலையில், தற்போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களில் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டுள்ளனர். படத்தின் பிரிட்டிஷ் காலத்தில் நடைபெறும் வகையில் ரயில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி ரயில் முழுவதும் பிரிட்டீஷ் காலத்திய மக்கள் இருக்கும்படியான காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மிகவும் பிரம்மாண்டமான வகையில் இந்த ரயில் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டு படமாக்கப்பட உள்ளன.

Actor Kamal haasan and Indian 2 movie team planned for British period train action sequence

தற்போது ஜோகன்ஸ்பர்க்கில் கமல்ஹாசன் உள்ள நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் இசைக்கருவி ஒன்றை இசைத்து, அதன் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், தற்போது கமலின் புதிய புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கேமராவுடன் காணப்படும் கமல்ஹாசன், புகைப்படங்களை எடுக்கும் வகையில் வெளியில் செல்வதாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X