Actor Kamal haasan: செர்பியாவில் நாளை துவங்கும் தக் லைஃப் பட சூட்டிங்.. தயாரான கமல்ஹாசன் -ஜெயம்ரவி!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய KH234 படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட நிலையில் படக்குழுவினர் தற்போது செர்பியாவில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை முதல் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் முன்னதாக செர்பியாவின் பனி படர்ந்த இடங்களில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது.
இந்தப் படத்திற்காக தற்போது கமல்ஹாசன் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள நிலையிலும் அவர் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக செர்பியா செல்லவுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்டவர்கள் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியுள்ளனர். படத்திற்காக ஜெயம்ரவி 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார். நீண்ட காலங்களாக முடங்கி கிடந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுத்த கமல்ஹாசன் தற்போது படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் மே மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியன் 3 திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 2 சூட்டிங்: இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துவரும் பாடல் காட்சியின் சூட்டிங் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சிகளை நிறைவு செய்துவிட்டு படத்தின் போஸ்ட் ரிலீஸ் வேலைகளில் இயக்குனர் சங்கர் ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி: தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. தற்போது படத்தின் சூட்டிங் செர்பியாவில் நடத்தப்பட உள்ளது. இதன் சூட்டிங் நாளைய தினம் துவங்கவுள்ளது. இதற்காக 10 நாட்கள் கால்ஷீட்டை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் இணைந்து நடிக்க உள்ளனர். மல்ட்டி ஸ்டாரர் படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது.
மீண்டும் செர்பியா சூட்டிங்: முன்னதாக மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் சூட்டிங் செர்பியாவின் பனிபடர்ந்த இடங்களில் நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த இடத்தை தன்னுடைய தக் லைஃப் படத்திற்காக மணிரத்னம் தேர்ந்தெடுத்துள்ளார். காஷ்மீரை நினைவுப்படுத்தும் இந்த இடத்தின் பல அழகான லொகேஷன்களில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென முன்னதாகவே லொகேஷன்களை பார்ப்பதற்காக மணிரத்னம் சென்றிருந்தார். அதன் புகைப்படங்களும் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.


Click it and Unblock the Notifications











