அன்பு தம்பி புனித் ராஜ்குமாரின் மரண செய்தி வேதனை அளிக்கிறது.. கமல்ஹாசன்.. மோகன் லால் இரங்கல்!

சென்னை: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் மோகன் லால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Appu Please திரும்ப வா... கதறும் பிரபலங்கள் | Kannada Actor Puneeth Rajkumar Passed Away

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் இன்று பகல் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 46 வயதான நடிகர் புனித்தின் திடீர் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடிகர் புனித் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அவரது திடீர் மரணம் திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கன்னட திரை உலகின் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரின் மறைவை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

மோகன் லால் இரங்கல்

மோகன் லால் இரங்கல்

இதேபோல் மலையாள நடிகர் மோகன் லாலும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் புனித் ராஜ்குமாரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடை தம்பியை இழந்துவிட்டதை போல் உணருகிறேன். நான் நெருங்கிய உறவை கொண்டிருந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய பிரார்த்தனைகள். அவர்கள் இந்த இழப்பைச் சமாளிக்கும் வலிமையையும் ஆறுதலையும் பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான்

ஏஆர் ரஹ்மான்

இதேபோல் ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், ஆர்யா, சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன், வனிதா விஜயக்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X