Kamal haasan: வயநாடு நிலச்சரிவு.. சரியான நேரத்தில் கைக்கொடுத்த கமல்ஹாசன்.. ரூ.25 லட்சம் நிதியுதவி!

சென்னை: கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள அரசு மற்றும் ராணுவத்தினர் இணைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பாக கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அளித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் கேரள முதலமைச்சர் நிதிக்கு நிவாரண உதவியை அளித்துள்ளார்.

Kamal haasan Thug life movie

வயநாடு நிலச்சரிவு சம்பவம்: கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் அனுதாபங்கள் பெருகி வருகின்றன. இந்த நேரத்தில் தமிழக நடிகர்களும் கை கொடுத்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் இணைந்து கேரளாவிற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் நிவாரண உதவியை அறிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பிலும் கேரளாவிற்கு இந்த கடினமான நேரத்தில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண உதவியாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண உதவி: இந்நிலையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசனும் 25 லட்சம் ரூபாய் நிதியை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக கேரளா மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் குறித்து அவர் தன்னுடைய வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் தன்னுடைய நெஞ்சை பதற வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். வீடு, வாசல், உடைமைகளை இழந்து தவிக்கும் குடுமபங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

Kamal haasan Thug life movie

ராணுவத்தினருக்கு நன்றி: பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய பேரிடர்கள் வழக்கமாகிவிட்ட நிலையில், அனைவரும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான மற்றும் கடினமான சூழ்நிலைகளில் உயிரை பணயம் வைத்து செயலாற்றும் ராணுவத்தினர் மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்களுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். மீட்புப் பணியை துரிதப்படுத்தும்படி மத்திய அரசையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழக அரசு நிவாரண உதவி: வயநாட்டில் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை மற்றும் அதையொடடி பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த பேரிடர் காலத்தில் கேரள அரசுடன் துணை நிற்க இந்திய அளவில் பலரும் இணைந்து வருகின்றனர். தமிழக அரசும் 5 கோடி ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ள நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து முன்னதாக 50 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர். தற்போது கமல்ஹாசனும் 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X