மரணமாஸ் லுக்கில் கமல்ஹாசன்.. ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வந்தவரை கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி என முன்னணி நடிகர்கள் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் ஏறக்குறைய தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ள நிலையில், கமல்ஹாசனுடன் சில காம்பினேஷன் காட்சிகள் மட்டும் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Kamal haasan Thug life movie Indian 2 movie

நடிகர் கமல்ஹாசன்: விக்ரம் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நிற்க கூட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து பிக்பாஸ், நடிப்பு மற்றும் அரசியல் என சுழன்று வருகிறார். அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் கலெக்ஷனை நெருங்கி வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

தக் லைஃப் படம்: இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங்கை சென்னையில் முடித்துள்ள படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனது போர்ஷனை நிறைவு செய்த நடிகர் சிம்பு டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனாலும் கமல்ஹாசனுடன் சிம்புவிற்கு சில தினங்கள் காம்பினேஷன் காட்சிகள் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு புறம் ஷூட்டிங்கை மணிரத்னம் துரிதப்படுத்திவரும் சூழலில் மறுபுறம் டப்பிங் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அலுவலகத்தில் திடீர் விசிட்: இதனிடையே தக் லைஃப் படம் வரும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தை மணிரத்னம் கையில் எடுத்துள்ளதாகவும் கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் உள்ள தன்னுடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திடீர் விசிட் செய்துள்ளார். அவரது இந்த திடீர் விசிட்டால் ரசிகர்கள் ஏராளமானோர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

புதிய லுக்கில் கமல்ஹாசன்: தொடர்ந்து அனைவரையும் வணங்கிய கமல்ஹாசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த திடீர் விசிட்டிற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்கான லுக் தற்போது வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கிளீன் ஷேவுடன் கமல்ஹாசன் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது தாடியுடன் கமல்ஹாசன் காணப்படுவதால் அவர் இருவேறு கெட்டப்புகளில் நடிப்பது உறுதியாக உள்ளது. சிம்புவின் அப்பா என்பதால் வயதான கேரக்டரில் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளதும் அதன் லுக்கிலேயே தற்போது காணப்படுவதும் உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X