Actor Kamal haasan: மும்பைக்கு போன உலகநாயகன்.. ஐபிஎல் கிரிக்கெட் லைவில் பேசப் போறாரா!
மும்பை: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் முன்னதாக ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சூழலில் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனை இன்றைய தினம் மும்பையில் படக் குழுவினர் துவங்கவுள்ளனர். இன்று நடைபெற உள்ள ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையிலான முக்கியமான ஐபிஎல் போட்டியில் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் லைவில் பேச உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் இருவரும் மும்பை புறப்பட்டு சென்றுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மாஸாக அமைந்து வருகின்றன. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் அவர் இணைந்து வருகிறார். இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி 2898 ஏடி, தக் லைஃப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இடையில் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்தியன் 2 ரிலீஸ்: இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது ஒரு பாடல் காட்சி மீதம் உள்ளதால் ஜூலை மாதத்திற்கு இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் சேனாபதி கேரக்டருக்கான பாடல் காட்சி ஒன்று சூட் செய்யப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளி போய் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களையும் லைகா நிறுவனம் துவங்கியுள்ளது.
கிரிக்கெட் லைவில் பேசும் கமல்: இந்தப் படத்தின் பிரமோஷன் இன்று மாலை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஐபிஎல் போட்டிக்கான கிரிக்கெட் லைவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா சேனலுக்காக கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் இணைந்து பேசவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இதையொட்டி மும்பை புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசன் மும்பை புறப்பட்டு சென்ற விமான நிலைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. மும்பை விமானநிலையத்தில் அவர் மிகவும் இயல்பாக ரசிகர்களுக்கு கையசைத்த படி நடந்து செல்வதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது.

லைவ் நிகழ்ச்சியில் கமல் & ஷங்கர்: இன்று மாலை 6 மணிக்கு ஐபிஎல் போட்டியின் லைவ் நிகழ்ச்சியில் இவர்கள் பேசவுள்ள சூழலில் படம் குறித்த பல்வேறு சுவாரசியங்கள் வெளியிடப்படும் என்றும் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. படத்தில் கமல்ஹாசன் சேனாபதி கேரக்டரில் மாஸ் காட்டியுள்ளார். முன்னதாக வெளியான இந்தியன் படத்தில் இவர் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











