Actor Kamal haasan: அதிகமாக பட பிரமோஷன்களில் ஈடுபட காரணம்.. கமல் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் 2 படம் கொடுத்த மிகப் பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கடந்த மாதத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கல்கி 2898 ஏடி படம் வெளியாகி ஆயிரம் கோடி கிளப்பில் இணைய உள்ளது.
இந்நிலையில் வரும் 12ம் தேதி கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்காக இந்தியாவின் பல பகுதிகளிலும் பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. 70 வயதை கடந்த நிலையிலும் கமல்ஹாசனின் இந்த எனர்ஜி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு சிறப்பான பல வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான விக்ரம் 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் கல்கி 2898 ஏடி படம் ரிலீசாகி 1000 கோடி கிளப்பை நோக்கி நடை பயின்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து வரும் 12ம் தேதி கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ளது.
இந்தியன் 2 பட பிரமோஷன்கள்: இந்த படத்தின் பிரமோஷன்களில் தொடர்ந்து கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் ஏராளமான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பல இடங்களிலும் இந்த படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்று வருகிறது. முன்னதாக இந்தியன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் மும்பையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் ஹைதராபாத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பல இடங்களில் ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.
அதிகப்படியான பிரமோஷன்கள்: படத்தின் இயக்குனர் ஷங்கர், நடிகர் சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்களுடன் கமல்ஹாசன் தொடர்ந்து ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் அதிகமான பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், என் மீதான அன்பை கைத்தட்டல் மூலம் ரசிகர்கள் வெளிப்படுத்துவதை போலவே, நாங்களும் எங்களுடைய படம் வெளியாகும்போது அதுகுறித்த தெளிவை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தெருவில் காய்கறி விற்பவர், தான் வைத்துள்ள காய்கறிகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் எவ்வாறு சிறப்பாக நடந்து கொள்வாரோ அப்படித்தான் நான் என்னுடைய ப்ராடக்ட்டை மக்களுக்கு விளம்பரப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் எனர்ஜி: மேலும் தன்னுடைய படம் வெளியாகும் போது அது குறித்து மக்கள் அனைவருக்கும் சிறப்பான புரிதல் இருக்க வேண்டும என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் நடிகர்களும் படங்களை நடிப்பதுடன் தங்களுடைய கடன் தீர்ந்ததாக நினைத்துக் கொண்டு படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபடாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் 70 வயதை கடந்த கமல்ஹாசன் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்காகவும் நாடு நாடாக சென்று அதிகப்படியான பிரமோஷன்களில் எந்தவித சிரமமும் இன்றி பங்கேற்று வருவது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











