படத்தின் ப்ரமோஷன்களுக்கு தனியாக சென்றது ஏன்.. கமல் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான விக்ரம் படம் 200 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது.
Recommended Video
சிறப்பான விமர்சனங்களையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் சிறப்பான அனுபவத்தை அனைவருக்கும் தந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கலந்துகொண்டனர்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் விக்ரம். இந்தப் படத்திற்கு முன்னதாக சிறப்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்ட நிலையில், படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். சிறப்பான த்ரில் அனுபவத்தை படம் கொடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். படத்தில் ஏராளமான நடிகர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொரு கேரக்டருக்கும் சிறப்பான வாய்ப்பை லோகேஷ் வழங்கியுள்ளார்.

சிறப்பான நடிப்பு
படத்தில் கமலின் பேரனாக வரும் குழந்தையிடம் கூட சிறப்பாக வேலை வாங்கியுள்ளார் லோகேஷ். குட்டி விக்ரமாக வரும் குழந்தை தர்ஷன், சிறப்பான எமோஷன்களை காட்டி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இதனிடையே தற்போது விக்ரம் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது.

நல்ல வரவேற்பு
நல்ல முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை கொடுப்பார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. படம் தற்போது சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து தற்போது படத்தின் சக்சஸ் மீட் வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சக்சஸ் மீட்
இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பல கேள்விகள் இந்த மீட்டில் கேட்கப்பட்டது. அவை அனைத்திற்கும் பொறுமையாக கமல் மற்றும் லோகேஷ் பதிலளித்தனர்.

கமல்ஹாசன் விளக்கம்
இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்கு கமல் தனியாக சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தான் எந்த காரணத்திற்காகவும் அவ்வாறு செல்லவில்லை என்றும் தங்களுடைய டீம் வேலைகளை பிரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

வேலைகளை பிரித்துக் கொண்டோம்
தான் பிரமோஷன்களுக்கு சென்றபோது படக்குழுவினர் படத்தின் சென்சார் உள்ளிட்ட மற்ற வேலைகளை செய்ததாகவும் அவர் கூறினார். படத்தின் ரிலீசுக்கு முன்னதாக கமல்ஹாசன் டெல்லி, மும்பை மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் தனியாக சென்று பிரமோஷன்களில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்போது அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.


Click it and Unblock the Notifications











