Kamal haasan: நீ பெரும் கலைஞன்.. கமல்ஹாசனுக்கு ப்ளூ சட்டை மாறன் பாராட்டு!

சென்னை: உலகநாயகனாக கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைத்துறையில் 63 ஆண்டுகளை கடந்துள்ளார்.

இதையொட்டி நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Actor Kamal haasan completes 63 years in Cinema and director Blue sattai maran wishes

சினிமாவில் 63 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கியவர். களத்தூர் கண்ணம்மா படத்தில் துவங்கிய இவரது பயணம், தற்போது விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் என தொடர்ந்து வருகிறது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசுடன் இணைந்து கல்கி 2898 AD படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார்.

இந்தப் படங்களை தொடர்ந்து ஹெச் வினோத், மணிரத்னம் என அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனிடையே, தயாரிப்பாளராக விக்ரம் படத்தை வெற்றிப்படமாக்கிய கமல்ஹாசன், அடுத்ததாக சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்டவர்களின் படங்களையும் தயாரிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் சிம்பு படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் கமல்ஹாசன். இவரை உலக நாயகன், சினிமா என்சைக்கிளோபீடியா என்று பலவாறாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் ஏ டூ இசட் இவருக்கு அத்துப்படியாக உள்ளது. இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை காட்டிவரும் கமல்ஹாசன், சினிமாவில் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார். இதன்மூலம் அந்தத் துறைகளில் இவர் பல அறிவுரைகளையும் வழங்க முடிகிறது.

இந்நிலையில் சினிமாவில் இவர் என்ட்ரி கொடுத்து 63 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று உருக வைத்தவர். சமீபத்தில் விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாங்களா என்று கேட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இவரது இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சேனாபதி கேரக்டரின் மேக்கப்பிற்காக தினந்தோறும் 6 மணிநேரங்களை செலவழித்து நடித்து முடித்தள்ளார் கமல்ஹாசன்.

Actor Kamal haasan completes 63 years in Cinema and director Blue sattai maran wishes

விரைவில் இவரது வில்லன் அவதாரத்தையும் பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றன. பிரபாசுடன் இவர் வில்லனாக நடித்துவரும் கல்கி 2898 AD படத்தின் மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட, கமலும் ஒரு காரணமாக அமைந்துள்ளார். இந்நிலையில் திரையுலகில் கமல் 63 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறனும் கமலுக்கு தன்னுடைய பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தசாவதாரம் படத்தில் வரும் பாடல் வரிகளையும் கமல்ஹாசனின் புகைப்படத் தொகுப்புகளை கொண்ட புகைப்படத்தையும் இணைத்து அவர் தன்னுடைய பதிவை வெளியிட்டுள்ளார். நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன் என்று அவர் கமலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கமலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் தன்னுடைய தந்தைக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X