Kamal haasan: 64 ஆண்டு திரைப்பயணம்.. He is the King.. இணையத்தில் கலக்கும் கமல்ஹாசன் வீடியோ!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பன்முகம் காட்டி வருகிறார்.
களத்தூர் கண்ணம்மாவில் அப்பாவி சிறுவனாக நடித்து அனைவரையும் கவர்ந்த கமல்ஹாசன், தற்போதுவரை தன்னை சூப்பர் ஹீரோவாக வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்து தன்னுடைய 64 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள கமல்ஹாசன், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார்.
கமலின் 64 ஆண்டுகால திரைப்பயணத்தின் சிறப்பு வீடியோ: உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்குள் நடிப்பு, தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகத்திறமை ஒளிந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாக கொண்டாடப்படும் கமல்ஹாசன், நடிப்பை தவிர்த்து சினிமாவின் அனைத்து தொழில்நுட்பங்களிலும் கரை தேர்ந்தவராக உள்ளார். அனைத்து தரப்பினருக்கும் ஆச்சர்யங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
பழைய தொழில் நுட்பங்களில் மட்டுமில்லாமல் தற்போது நவீன தொழில்நுட்பங்களிலும் எவற்றையெல்லாம் எப்படி பயன்படுத்தினால் சிறப்பான ரிசல்ட்டை பெறலாம் என்பது வரை தேர்ந்தவராக உள்ளார் கமல்ஹாசன். இவரிடம் நடிப்பை கற்பதற்காகவே இவருடன் இணைந்து நடிக்க ஏராளமான இளம் நடிகர்கள் துடிப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தான் கமலின் தீவிர ரசிகராக இருந்ததால் மட்டுமே விக்ரம் படத்தை யோசிக்க முடிந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பு சாத்தியமாக என்பதற்கு வாழும் உதாரணமாக உள்ள கமல்ஹாசன், இந்தப் படத்தின் சேனாபதி கேரக்டரின் மேக்கப்பிற்காக தொடர்ந்து தினந்தோறும் 6 மணிநேரங்களை செலவழித்திருந்தார். தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு பிரபாசின் கல்கி 2898 AD படத்தில் வில்லனாகவும் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
இதனிடையே தயாரிப்பிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார் கமல். தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் சூட்டிங், கமல் தயாரிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் சிம்புவின் STR48 படத்தின் சூட்டிங்கும் கமல் தயாரிப்பில் துவங்கவுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் கமலும் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத், மணிரத்னம் என அடுத்தடுத்த இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இந்த வயதிலும் தன்னை மிகவும் பிட்டாக வைத்து வருகிறார் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் சூட்டிங்கின் இடையில் கிடைத்த கேப்பில், எளிதான வொர்க் அவுட்களை கமல் மேற்கொண்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. அந்த வகையில் தன்னுடைய வேலைகளில் மட்டுமில்லாமல் பிட்னசிலும் சிறப்பான கவனத்தை செய்து வருகிறார்.
தற்போது கமல் தன்னுடைய கேரியரில் 64 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் வாழ்த்துக்களால் நிரம்பி வருகின்றன. இதனிடையே, கமலின் இந்த சாதனை பயணத்தை பாராட்டும் வகையில் சிறப்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. He is the seeder.. he is the fire.. he is the king என்று துவங்கும் அந்தப் பாடலில் மிகச்சிறப்பான காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











