ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜி… கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் வெள்ளித்திரைக்கு வந்த முக்கியமானவர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர். இவர், சித்தி சீரியலில், டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் பாலாஜி என்ற பெயரோடு டேனியல் சேர்ந்து கொண்டு டேனியல் பாலாஜியாக மாறினார்.

Actor Kamal haasan condoles death of Vettaiyaadu Vilaiyaadu actor daniel balaji

கௌதம் மேனனின் நண்பரான டேனியல் பாலாஜி அவரின் இயக்கத்தில் உருவான காக்க காக்க படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு படத்திலும், மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ராகவா இப்போ வாடா என்று சொல்லும் போது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பார். இதைத் தொடர்ந்து பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் சண்டை போடும் காட்சியில் கைத்தட்டலை அள்ளி இருப்பார்.

இப்படி தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. வேட்டையாடு விளையாடு, பொல்லாவன் படத்தில் காட்டுமிராண்டித்தனமாக வில்லனாக நடித்து பெயர் எடுத்த இவர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில், காவி வேட்டி, நெற்றியில் பட்டை என வேறுமாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார்.

Actor Kamal haasan condoles death of Vettaiyaadu Vilaiyaadu actor daniel balaji

இப்படி தொடர்ந்து படங்களை கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வந்த டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு விஜய்சேதுபதி, அமீர், அதர்வா, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X