இவ்வளவு சீக்கிரம் போகனுமா இர்ஃபான் ஜி .. நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினேனே.. கமல் உருக்கம்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கானின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

பெருங்குடல் தொற்று காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் இர்ஃபான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

53 வயதான இர்ஃபான் கான் மரணமடைந்த தகவலால் இந்திய சினிமாத்துறை கலங்கி போயுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் வலியை பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வளவு சீக்கிரமா?

இவ்வளவு சீக்கிரமா?

இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் இர்ஃபான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இர்ஃபான் ஜி இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா. உங்களின் வேலை எப்போதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

விரும்பினேனே..

விரும்பினேனே..

எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன். நீங்கள் நீண்ட காலம் வாழ தகுதியுடையவர். உங்கள் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அகாடமி விருதுகள்

அகாடமி விருதுகள்

நடிகர் இர்ஃபான் கான் பாலிவுட் திரைத்துறையினர் மட்டுமின்றி மற்ற மாநில சினிமா கலைஞர்களுடனும் நல்ல நட்பை பாராட்டி வந்தார். விளம்பர படங்கள் மூலம் அறிமுகமாகி சினிமா சம்பந்தப்பட்ட அகாடமி விருதுகளை பெறும் அளவுக்கு தன்னைத்தானே செதுக்கி கொண்டவர் இர்ஃபான் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X