ஆஸ்திரேலியாவில் அமைச்சர்களுடன் கமல் ஆலோசனை.. எதுக்கு தெரியுமா.. வெளியானது சிறப்பான வீடியோ!
சிட்னி :நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வசூலில் இமாலய சாதனை படைத்தது.
கமலே எதிர்பார்க்காத வகையில் ஏறக்குறைய 450 கோடி ரூபாய்களை வசூலித்தது இந்தப் படம்.
மேலும் படத்தின் டிஜிட்டல், ஓடிடி ரைட்ஸ் விற்பனையும் களைகட்டியது. தற்போது ஓடிடியிலும் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் சிறப்பான பல படங்களில் நடித்தவர். சினிமா குறித்த இவரது அறிவு இவருக்கு உலக நாயகன் என்ற பெயரை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. தற்போதும் சினிமாவிற்கான என்சைக்கிளோ பீடியாவாக காணப்படுகிறார் கமல். இந்த வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் இவரது எனர்ஜி காணப்படுகிறது.

விக்ரம் படம்
இதை அவரது பல படங்கள் எடுத்துக் காட்டியுள்ள போதிலும், சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான இந்தப் படம் ஒரு மாதத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஓடிடியில் ரிலீஸ்
தற்போது ஓடிடியிலும் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கமலின் முந்தைய படங்கள் சிறப்பாக அமைந்த போதிலும் இந்தப் படம்தான் அதிகமான வசூலை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்திருந்தார் கமல்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தின் வசூல் சாதனையை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை அறிவித்து வருகிறார். கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடிக்கும் அடுத்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. மேலும் தன்னுடைய நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
Recommended Video

விக்ரம் 3 படம்
தற்போது தளபதி 67 படத்தில் கவனம் செலுத்திவரும் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 3 படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்தையும் கமல்தான் தயாரிக்கவுள்ளார். இதை முன்னதாகவே அவர் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கமல்
கமலின் விக்ரம் படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் தனது அடுத்தப்படத்தின் சூட்டிங் குறித்த வேலைகளில் இறங்கியுள்ளார் கமல். இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர்களும் அவர் பேசியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











