Kamal haasan: நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி வழங்கிய கமல்ஹாசன்.. அடுத்தடுத்து குவியும் நிதி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் என திரைத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டிட பணிகளை நிறைவு செய்ய 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்னதாக கூறப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ள நிலையில் முன்னதாக நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் இந்த சங்க கட்டிட பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் வழங்கினர்.

இந்நிலையில் கடந்த மாதத்தில் அமைச்சர் உதயநிதி இந்த கட்டிடத்திற்கான வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார். சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர் இதற்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனும் சங்க கட்டிடத்திற்கான வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசொலையை கொடுத்துள்ளார். பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோரை சந்தித்து அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார். அடுத்தடுத்து வைப்பு நிதிகள் கொடுக்கப்பட்டு வருவதால் இந்தக் கட்டிடப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Kamal haasan donates One crore rupees for Nadigar Sangam building


தென்னிந்திய நடிகர் சங்கம்: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி துணை தலைவராக பூச்சி முருகன் கருணாஸ் குஷ்பூ உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த சங்கத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த கட்டிட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக அடுத்தடுத்து விஷால் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கட்டிட வைப்பு நிதியாக அடுத்தடுத்து நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த நிதி உதவிகள்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து 25 லட்சத்திற்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள், தொடர்ந்து நடிகர் கார்த்தி 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் நடிகர் விஷால் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த சங்க கட்டிடத்திற்கான வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

கமல்ஹாசன் நிதியுதவி: இதற்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கியுள்ளார். அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வைத்து இந்த நிதியை பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சங்க கட்டிட பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நிதி பிரச்சனை காரணமாக நிறைவடையாமல் உள்ளது.

கட்டிடப்பணிகள் விரைவில் நிறைவு?: இந்நிலையில் அடுத்தடுத்து சங்க கட்டடத்திற்காக உதயநிதி, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் கட்டிடப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் இந்த சங்க கட்டடப்பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம் இந்த சங்க கட்டடத்தை கட்டி முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முன்னதாக விஷால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சங்க கட்டிட பணிகள் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்வாரா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X