Kamal haasan: என்னால் நம்ப முடியவில்லை.. கமல் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்காலிகமாக ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் டைட்டில் கடத்ந சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவில் மாற்றி அமைக்கப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவிருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கி 2898 AD படத்தில் இணைந்தது குறித்து கமல் ஆச்சர்யம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கல்கி 2898 AD. முன்னதாக பிராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அமிதாப் பச்சனும் வீடியோ காலில், கமல் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

தெலுங்கின் முன்னணி ஹீரோவாக மட்டுமில்லாமல் பான் இந்தியா ஸ்டாராகவும் உள்ள பிரபாஸ் பாகுபலி படங்களின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். அவரது நடிப்பில் சலார் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக கல்கி 2898 AD படமும் சிறப்பான வகையில் உருவாகி வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துவரும் இந்தப் படம் அதிகமான பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. சமீப காலங்களில் அவர் வில்லனாக நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிரபாசிற்கு வில்லனாக அவர் நடிக்க கமிட்டாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் தனக்கும் வியப்பையே ஏற்படுத்தியுள்ளதாக கமல் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Actor Kamal haasan expressed his surprise about how he became a part of Kalki 2898 AD movie

படத்தின் இயக்குநர் நாக் அஷ்வினுடன் இணைந்து நடிகர் கமல் கொடுத்துள்ள இந்தப் பேட்டியில், படத்தில் தான் இணைந்தவுடன் தன்னிடம் வந்த பிரபாஸ், தன்னுடைய கைகளை பற்றிக் கொண்டு, படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதற்காக நன்றி தெரிவித்ததாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் இணைந்தது குறித்து தனக்கே வியப்பு இன்னும் அகலவில்லை என்றும் தன்னை எப்படி இந்தப் பிராஜெக்ட்டிற்குள் இயக்குநர் உள்ளிட்டவர்கள் இணைத்தனர் என்பது குறித்து தன்னுடைய வியப்பு குறையவில்லை என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் 25 வயது இளைஞனாக கமல்ஹாசன் நடித்துள்ளார். இதற்காக சமீபத்திய டெக்னாலஜியை ஷங்கர் படத்தில் பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். இந்தக் காட்சிகளில் லஞ்சத்திற்கு எதிராக இளவயது கமல் மாறும் அழுத்தமான சூழல் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X