Indian 2: இந்தியன் 2 படத்தை பாராட்டிய கமல்ஹாசன்.. ஷங்கருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவுபெறவுள்ளது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் முதல் பாகத்தை போலவே இந்தப் படமும் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்துள்ளார். முதல் பாகத்திலும் ஊழலுக்கு எதிராக போராடும் வகையில் இந்த கேரக்டர் அமைந்திருந்தது.

Actor Kamal haasan gifts costly Watch to Director Shankar after watching Indian 2 movie rushes

இந்தியன் 2 படத்தை பாராட்டி, ஷங்கருக்கு காஸ்ட்லி வாட்சை பரிசளித்த கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் கலக்கலான பர்பார்மென்ஸ் கொடுத்திருந்த படம் இந்தியன். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்திருந்த நிலையில், சேனாபதி, சந்துரு என இரட்டை கேரக்டர்களில் இந்தப் படத்தில் மிரட்டியிருந்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் ஊழலுக்கு எதிராக களமிறங்கும் சுதந்திர போராட்ட வீரராக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் முடங்கியது. இந்நிலையில், இந்தப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. படம் மீண்டும் கடந்த ஆண்டிலிருந்து சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில், பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் டீசர், ட்ரெயிலர், இசை வெளியீடு, ரிலீஸ் தேதி என அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் மிகுந்த மெனக்கெடலை செய்து வருகிறார். அவருக்கு மேக்கப் போடவே 3 மணிநேரம் ஆவதாகவும் கலைப்பதற்கு 3 மணிநேரம் செலவாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேக்கப் 5 மணிநேரங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்றும் இதற்குள் அன்றைய தினத்தின் சூட்டிங்கை ஷங்கர் திட்டமிட்டு நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த மேக்கப்பை போட்டுவிட்டால் கமலால் எதையும் சாப்பிடக்கூட முடியாதாம். ஸ்ட்ராவால் ஜூஸ் போன்றவற்றை மட்டுமே அவர் குடிக்க முடியும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டது. இத்தனை அவதிகளை கமல்ஹாசன் மட்டுமே ஒரு படத்திற்காக செய்ய முடியும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குநர் ஷங்கரை பாராட்டித் தள்ளியுள்ளார். இந்தியன் 2 படத்தின் பிரதானக் காட்சிகளை தான் பார்த்ததாகவும் ஷங்கருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவே அவரது கலைவாழ்வின் மிக உயரமான நிலை என்றும் இதை உச்சமாக கொள்ளாமல் மீண்டும் திமிறி எழுந்து, பல புதிய உயரங்களை தேடி அவர் எழவேண்டும் என்றும் கமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஷங்கருக்கு மிகவும் விலையுயர்ந்த Panerai Luminor வாட்ச்சை கமல் பரிசளித்துள்ளார். இந்த கடிகாரத்தின் விலை 8.77 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரித்துவரும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, தைவான், ஆப்ரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X