SK21 movie: கமல் கைக்கு போன சிவகார்த்திகேயன் பட டைட்டில்.. அட இந்த டைட்டிலா!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த வரவேற்பு மற்றும் வசூல் அவரை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உற்சாகமாக நடைபோட செய்து வருகிறது. தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், பிரபாசின் கல்கி 2898 AD படங்களில் நடிக்க வைத்துள்ளது. மேலும் மணிரத்னத்தின் தக் லைப் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்ஹாசன். ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் KH233 படத்தில் கமிட்டாகியிருந்த நிலையில், இந்தப் படத்தில் இணையாமல் தற்போது மணிரத்னத்துடன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

இதனால் கமல்ஹாசன் -ஹெச் வினோத் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார் கமல்ஹாசன். கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள SK21 படத்தின் சூட்டிங் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது STR48 படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்றைய தினம் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

Actor Kamal haasan going to choose Actor Sivakarthikeyans SK21 movie title

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடிகராக ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். தொடர்ந்து பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கல்வி 2898 AD படத்தில் அவருக்கு வில்லனாகியுள்ளார். படம் மே மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

கமலின் அடுத்தடுத்த படங்கள்: இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக சைபீரியா, ரஷ்யா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக்கு போன்ற நடிகர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது கமல் அமெரிக்கா சென்றுள்ளார். இடையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் கவனித்து வருகிறார்.

தயாரிப்பாளர் கமல்ஹாசன்: தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துவரும் SK21 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பட டைட்டில்: இந்நிலையில் இந்தப் படத்திற்கு மூன்று டைட்டில்களை படக்குழுவினர் இறுதி செய்து அவற்றை தயாரிப்பாளர் கமல்ஹாசனிடம் கொடுத்துள்ளதாகவும் அவர் விரைவில் டைட்டிலை இறுதி செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் போர்க்களத்தில் சிங்கம் ஒரு டைட்டிலாகவும் மற்றவை ராணுவக்களத்தை மையமாக வைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த டைட்டில்களை கமல் எதை தேர்ந்தெடுப்பார் என்று தெரிந்துக் கொள்ள ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X