Kamal haasan: இரட்டை சவாரி செய்ய தயாரான உலகநாயகன்.. சூப்பர் அப்டேட்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் இணையவுள்ளார்.
இரட்டை சவாரி செய்ய தயாரான கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் சிஜி வேலைகள் சிறப்பாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை தொடர் நடிகர் பிரபாசின் கல்கி 2898 AD படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் பிரபாசிற்கு வில்லனாக அவர் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்திற்காக சில தினங்களே அவர் கால்ஷீட் கொடுத்துள்ள போதிலும் அவருக்கு சம்பளமாக 150 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முற்றிலும் சிறப்பான நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள இந்தப் படமும் அடுத்த ஆண்டில்தான் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பில் கமல்ஹாசன் இணையவுள்ள படம் KH233. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளார். படத்தின் சூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ராணுவ பின்புலத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தக் கதையை ஹெச் வினோத் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் திரைக்கதை மற்றும் டைரக்ஷனை ஹெச் வினோத் மேற்கொண்டுள்ளார். நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த இரு விஷயங்களையும் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் படத்தில் ரிடையர்ட் ராணுவ அதிகாரியாக கமல்ஹாசன் நடிக்கவுள்ள நிலையில் தீவிரவாதிகளை தேடி அவரது பயணம் படத்தின் கதைக்களமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஆக்ஷன், சென்டிமெண்ட் என மாஸ் காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது புதிய கெட்டப்பில் கமல்ஹாசன் உள்ள நிலையில், இது கல்கி படத்திற்காகவே அல்லது KH233 படத்திற்காகவா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











