வேட்டையாடு விளையாடு படம்குறித்த விவாதம்.. கமல் கேரக்டர் என்ன தெரியுமா.. ஜெயமோகன் வெளியிட்ட அப்டேட்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன், கமாலினி முகர்ஜி, ஜோதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி முடித்துள்ள கௌதம் மேனன் அடுத்ததாக வேட்டையாடு விளையாடு 2 படத்தினை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்டையாடு விளையாடு படம்
நடிகர் கமல்ஹாசன், கமாலினி முகர்ஜி, ஜோதிகா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2006ம் ஆண்டில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படத்தை அவரது ரசிகரும் பிரபல இயக்குநருமான கௌதம் மேனன் இயக்கியிருந்தார். கமல் போலீஸ் ஆபிசராக நடித்திருந்த இந்தப் படம் த்ரில்லுக்கு பஞ்சமில்லாமல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வேட்டையாடு விளையாடு 2 படம்
இந்தப் படத்தின் வெற்றி படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டிலேயே இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இந்தப் படம் குறித்து கமலிடம் கௌதம் மேனன் பேசிவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தள்ளிப் போன சூட்டிங்
இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் தடைப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை கௌதம் மேனன் இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய நடிகர் கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க தான் எப்போதோ தயார் என்றும் கௌதம் மேனன்தான் தன்னை அணுகவில்லை என்றும் கூறியிருந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் அப்டேட்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கௌதம் மேனன் தயாரித்துவிட்டதாகவும் க்ளைமாக்ஸ் காட்சியைத்தான் தற்போது உருவாக்க வேண்டியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு மத்தியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிரபல ஸ்கிரிப்ட் ரைட்டரும் எழுத்தாளருமான ஜெயமோகனும் இந்தப் படம் குறித்து தற்போது தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கதை குறித்த விவாதம்
இந்தப் படத்தின் கதை குறித்து தானும் இயக்குநர் கௌதம் மேனனும் விவாதித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் கமல் போலீஸ் ஆபீசராக நடித்திருந்த நிலையில், வேட்டையாடு விளையாடு 2 படத்தில் அவர் ரிடையர்ட் போலீஸ் ஆபீசராக நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரிடையர்ட் போலீஸ் ஆபீசர்
மேலும் ரிரையர்டாகியுள்ள அவரிடம் மீண்டும் ஒரு கொலை வழக்கு குறித்த விசாரணை ஒப்படைக்கப்படுவதாகவும் அதை அவர் கண்டுபிடிப்பதாக கதை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தக் கதை மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கோ வில்லன்கள்
வேட்டையாடு விளையாடு படத்தில் சைக்கோ கொலையாளிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் வில்லன்கள் மிகவும் பவர்புல்லாக அமைந்ததே படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அந்த வகையில் வேட்டையாடு விளையாடு படத்திலும் வில்லன்களின் கேரக்டர் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்
விக்ரம் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், தேவர் மகன் 2, விக்ரம் 3 என அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் தற்போது வேட்டையாடு விளையாடு 2 படமும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











