Don't Miss!
- News
ஊருக்காக 5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார் அப்பா! பிளாஷ்பேக் பகிர்ந்த துரை வைகோ!
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடரும் வீணாகும் வாய்ப்பு
- Lifestyle
தம்பதிகளே! நீங்க உடலுறவு கொள்ளும்போது இந்த அறிகுறிகள் இருந்தா.. நீங்க ரொம்ப பாவமாம்...ஏன் தெரியுமா?
- Technology
Android மற்றும் iPhone ஹேங் ஆகிவிட்டதா? ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யலாமா? இது நல்லதா? கெட்டதா?
- Automobiles
இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்
- Finance
கடன் நெருக்கடி.. சீனா பில்லியனர் Hui ka-வின் சொத்துமதிப்பு 93% சரிவு..!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஹெச் வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்?
சென்னை : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போன நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது.
இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
காந்தியை
விமர்சித்தவன்
நான்..மன்னிப்பு
கூறவே
ஹே
ராம்
படம்
எடுத்தேன்..மனம்
திறந்த
கமல்ஹாசன்!

கமல்ஹாசனின் விக்ரம் படம்
நடிகர்
கமல்ஹாசனின்
விக்ரம்
படம்
கடந்த
ஆண்டில்
வெளியாகி
சர்வதேச
அளவில்
பிரம்மாண்டமான
வரவேற்பையும்
வசூலையும்
பெற்றது.
கமலின்
ராஜ்கமல்
இன்டர்நேஷனல்
நிறுவனம்
இந்தப்
படத்தை
தயாரித்த
நிலையில்,
இந்தப்
படம்
கமலுக்கு
நடிகராகவும்
தயாரிப்பாளராகவும்
சிறப்பாக
கைக்கொடுத்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பு
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திருப்பதியில் துவங்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய கமல்
இந்தப் படத்தின் சூட்டிங்கில் ஒருபுறம் கவனம் செலுத்திவந்த கமல்ஹாசன், மற்றொருபுறம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் வெற்றிகரமாக பங்கேற்று அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் அடுத்தப்படம்
இதனிடையே கமலின் அடுத்தப்படம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி இணையும் புதிய படத்தின் அறிவிப்பையும் கமல் வெளியிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஹெச் வினோத்துடன் இணையும் கமல்?
இந்நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கிய ஹெச் வினோத், அடுத்ததாக கமலை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை இந்தியன் 2 படத்தை தொடர்ந்து வினோத் இயக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியன் 2 படம்
சினிமா, அரசியல் என தன்னை எப்போதும் என்கேஜாக வைத்து வருகிறார் கமல்ஹாசன். அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகின்றன. 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு துவங்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.