Thug life: தக் லைஃப் சூட்டிங்கில் தாமதமாக கலந்துக் கொண்ட உலகநாயகன்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளார். இதனால் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தக் லைஃப் படம். இந்த படத்தின் சூட்டிங் முன்னதாக சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது டெல்லியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரிலும் சில தினங்கள் இந்த படத்தின் சூட்டிங் கமல்ஹாசன் இல்லாமலேயே நடத்தி முடிக்கப்பட்டது. டெல்லியில் தற்போது நடந்து வரும் இந்த படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு உள்ளிட்டவர்கள் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது இந்த படத்தில் முன்னதாக விக்ரம் படம் போலவே நடிகர் கமல்ஹாசன் பாடல் ஒன்றை தானே எழுதி பாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Kamal haasan going to write one song and sing for Thug life movie it seems

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் கடந்த சில தினங்களாக ஜெய்சல்மாரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது டெல்லியில் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக செர்பியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல்ஹாசன் இதில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த ஷூட்டிங் சரிவர நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. இதில் ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களின் கால்ஷீட் சொதப்பிய சூழலில் அவர்கள் இந்த படத்திலிருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் சூட்டிங்: இதனிடையே படத்தில் சிம்பு தற்போது இணைந்துள்ளார். தற்போது டெல்லியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாகவே கமல் இந்த ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் கழித்து இந்த ஷூட்டிங்கில் அவர் இணைந்துள்ளார். கமல் மற்றும் மணிரத்னம் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அவர் தக் லைஃப் சூட்டிங்கில் சரியாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதை நிரூபிக்கும் வகையில் தற்போது டெல்லி ஷூட்டிங்கிலும் அவர் தாமதமாக பங்கேற்று உள்ளார்.

பாடல் எழுதி பாடும் கமல்: ஆனால் அவர் தாமதமாக பங்கேற்றதற்கு காரணம் வேறு என்று படக்குழு சார்பில் தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பாடல் எழுதி பாடியது போலவே இந்த படத்திலும் தற்போது பாடல் ஒன்றை தானே எழுதி பாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் பணிகளுக்காகவே அவர் இந்த மூன்று நாட்கள் கேப்பை எடுத்துக் கொண்டதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இரு மணிநேரங்களில் ஏஆர் ரஹ்மான் இந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை என்பது போன்ற தகவல்கள் பரப்பப்பட்டு விட்டன.

கமல் -சிம்பு காம்பினேஷன் காட்சிகள்: தற்போது டெல்லி சூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள சூழலில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டவர்களின் காம்பினேஷன் காட்சிகள் தொடர்ந்து அங்கு படமாக்கப்பட உள்ளன. தொடர்ந்து இந்த ஷூட்டிங் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படக்குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக செர்பியாவிற்கு பயணமாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக நடிகர் சிம்புவிற்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு அவர் அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X