Actor Kamal haasan: பிரித்விராஜ் கிட்ட இதை எதிர்பார்க்கலை.. ஆடு ஜீவிதம் படத்தை மணிரத்னத்துடன் பார்த்த கமல்!
சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலாபால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வரும் 28ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் தற்போது இயக்குநர் பிளெஸ்ஸி வெற்றி கண்டுள்ளார். ஆடு ஜீவிதம் என்ற பெயரிலேயே இந்த படம் தற்போது உருவாகியுள்ளது. இன்னும் இரு தினங்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
முன்பதிவில் கேரளாவில் மட்டுமே முதல் நாளில் இந்தப்படம் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதுவரை வெளியான பிரித்விராஜின் படங்களில் முன்பதிவில் அதிகமான வசூலை குவித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக கடந்த 2008ம் ஆண்டிலேயே ஓகே சொன்னதாகவும் அப்போது தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எந்த முகத்தையும் கொண்டிருக்காமல் இருந்த நிலையில், இந்தப் படத்திற்காக பிளெஸ்ஸி தன்னை தேர்ந்தெடுத்தது தனக்கு வியப்பை கொடுத்தது என்றும் தனது சமீபத்திய பேட்டியில் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

ஆடுஜீவிதம் படம்: மலையாளத்தில் பென்யாமின் என்ற பிரபல எழுத்தாளரால் எழுதப்பட்டு தமிழ் உள்ளிட்ட பழமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆடு ஜீவிதம் நாவலை பிரபல இயக்குனர் பிளெஸ்ஸி தற்போது அதே பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். நாயகனாக பிரித்விராஜ் நாயகியாக அமலாபால் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளார் பிளெஸ்ஸி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஆடு ஜீவிதம் நாவல் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது அதையொட்டி உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
28ம் தேதி ரிலீஸ்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே படத்தின் பிரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரித்விராஜ், பிளெஸ்ஸியுடன் தற்போது கர்ப்பமாக உள்ள படத்தின் நாயகி அமலா பாலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று வருகிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை முன்பதிவு செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளாவில் மட்டுமே இந்த படம் முன்பதிவு மூலம் 2 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் பிரித்விராஜ் படங்களிலேயே முன்பதிவு மூலம் 2 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் என்ற பெருமையையும் ஆடு ஜீவிதம் படம் பெற்றுள்ளது.
பான் இந்தியா படமாக ரிலீஸ்: மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ஆடு ஜீவிதம் படம் வெளியாக உள்ளது. இதனால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய பெரிய அளவில் அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் மற்றும் ரசூல் பூக்குட்டி இணைந்து இசையமைத்துள்ளனர், கேரளாவில் இருந்து வயிற்றுப்பிழைப்பிற்காக அரபு நாட்டுக்கு செல்லும் இருவர் அங்கு மாட்டிக்கொண்டு ஆட்டுப்பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதையை மையமாகக் கொண்டு ஆடு ஜீவிதம் படம் உருவாகியுள்ளது.
படத்தை பார்த்த கமல் பாராட்டு: தற்போது இந்த படத்தின் பிரீமியர் ஷோவை நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பார்த்துள்ளார். படம் குறித்து அவர் தன்னுடைய மிகப்பெரிய உற்சாகத்தை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸியின் கடின உழைப்பை அவர் பாராட்டியுள்ளார். தொடர்ந்து இந்த படத்தை பார்த்து மணிரத்னம் மிகப்பெரிய அளவில் வியப்படைந்ததாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை எடுக்கும் பிளெஸ்ஸியின் தாகம் இந்த படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் படத்தின் மிகப்பெரிய பலமாக பிரித்விராஜ் செயல்பட்டு உள்ளதாகவும் அவர் இந்த அளவிற்கு நடிப்பார் என்று தான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். மிகச் சிறந்த படம் என்றும் இந்த படத்திற்கு ரசிகர்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











