நமக்காக நிகழ்ந்த நிஜம்.. குருதிப்புனல், சத்யா வரிசையில் அமரன் வராது.. கமல்ஹாசன் உறுதி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி மற்றும் மேஜர் முகுந்தனின் மனைவி ஹிந்து ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதனிடையே, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குருதிப்புனல் மற்றும் சத்யா படங்களின் வரிசையில் அமரன் வராது என்று கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அமரன்/ மேஜர் முகுந்தனின் பயோபிக்காக உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். படம் ராணுவ கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில் காஷ்மீரில் இதன் சூட்டிங் ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து நடந்தது. இதையடுத்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்: படத்தில் ராணுவ கதைக்களத்துடன் மேஜர் முகுந்தனின் காதல் கதையையும் இணைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படத்தில் மேஜர் முகுந்தனின் மனைவி இந்துவாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இவரது கேரக்டர் இன்ட்ரொடக்ஷன் வீடியோ தான் முதலில் இந்த படத்தின் ப்ரோமோஷனாக வெளியானது. இதையடுத்தே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசானது. இவை இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அமரன் அறிமுக வீடியோ: இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மேஜர் முகுந்தனின் மனைவி இந்து ஆகியோர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் ராஜ்குமார் பெரியசாமி, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் படம் குறித்தும் மேஜர் முகுந்தன் குறித்தும் அடுத்தடுத்து தங்களது நெகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த படம் முன்னதாக வெளியான குருதிப்புனல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு. சத்யா ஆகிய படங்களை போன்று அமரன் புனைகதை இல்லை என்றும் இது நமக்காக நடந்த நிஜம் என்றும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நெகிழ்ச்சி: இந்தக் கதை ஏன் இப்படி போனது என்று கூறமுடியாது என்றும் இதுதான் கதை, இதை தாங்கிக் கொள்ள முடிந்தால் தாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இந்தக் கதையின் கிளைமாக்சை முதலில் கேட்டவர் இவர்தான் என அவர் முகுந்தனின் மனைவி இந்துவை சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து நாம் அவருக்கு பதக்கம் உள்ளிட்ட மரியாதைகளை செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீரருக்கு நிகரான வீரர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தக் கதையை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் இது நிகழ்ந்துள்ளது தாங்கள் கண்டெடுத்துள்ளோம் என்றும் கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











