பாராட்டிய ஸ்ரீகாந்த்.. பயத்தை வெளிப்படுத்திய கமல்ஹாசன்.. கிரிக்கெட் லைவ்வில் சுவாரஸ்யம்!

மும்பை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் ஐபிஎல் கிரிக்கெட் லைவ்வில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்காக நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் பேசினர். அப்போது இந்தியன் 2 படம் குறித்து மட்டுமில்லாமல் கிரிக்கெட் குறித்தும் பல்வேறு சுவாரசியங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கமல்ஹாசன் குறித்து உற்சாகமாக பேசியதை பார்க்க முடிந்தது.

Actor Kamal haasan hails former cricketer Srikanth in Cricket live

இந்தியன் 2 படம்: இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் 38 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதனிடையே இதன் இரண்டாவது பாகம் கடந்த 2018ல் துவங்கப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்ட சூழலில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்தியன் 2 பிரமோஷன்கள்: படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இந்த படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக லைகா அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் மேட்சின் லைவ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் பங்கேற்று பேசினர்.

கமல் நடிப்பை பாராட்டிய ஸ்ரீகாந்த்: இந்த நிகழ்ச்சியில் ஆங்கர் பாவனா, ஆங்கர் கோபிநாத், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் இவர்களுடன் கலந்து கொண்டனர். இந்நிலையில் கமல்ஹாசனின் நடிப்பு குறித்து பாராட்டி பேசிய ஸ்ரீகாந்த், தொடர்ந்து அவரது மூன்றாம் பிறை படம் குறித்து சிலாகித்து பேசினார். இந்தப் படத்தில் துவக்கத்திலிருந்து கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவிக்கு இடையில் நடிப்பில் போட்டியிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் கிளைமேக்ஸ் கட்சியில் கமல் ஸ்கோர் செய்ததாக குறிப்பிட்டார். தலையில் சட்டியை வைத்துக்கொண்டு கமல் நடித்த நடிப்பை ஸ்ரீகாந்த் அரங்கத்திலேயே நடித்தும் காட்டினார்.

கமல்ஹாசன் பாராட்டு: இதைப் பார்த்த அனைவரும் கைத்தட்டி பாராட்டிய சூழலில், தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் பஞ்சதந்திரம் படத்தில் அவரை நடிக்க வைக்க தான் முயன்றதை சுட்டிக்காட்டி, நல்ல வேளை மூன்றாம் பிறையிலேயே அவரை நடிக்க வைக்காமல் போனதாக குறிப்பிட்டார். அப்படி ஸ்ரீகாந்தை மூன்றாம் பிறை படத்தில் நடிக்க வைத்திருந்தால் தன்னையும் ஸ்ரீதேவியையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் சட்டியை தூக்கிக்கொண்டு நடிப்பில் பின்னியெடுத்து இருப்பார் என்றும் கமல்ஹாசன் தன்னுடைய அச்சத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். இதைக் கேட்டு ஸ்ரீகாந்த் கூச்சப்பட்டு, என்ன கமல் சார் என்று கமலிடமே தஞ்சமடைந்தார். இவ்வாறாக இவர்களது பேச்சு சுவாரசியமாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் அமைந்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X