Kamal :இந்தியன் 2 காட்சிகளை பார்த்து அசந்துப்போன கமல்.. இந்திய படங்களுக்கு பென்ச்மார்க் என வியப்பு!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Actor Kamal haasan hails Indian 2 movie scenes and says it will set benchmark in indian cinema

தொடர்ந்து சென்னை, திருப்பதி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் தைவான், ஆப்பிரிக்கான போன்ற வெளிநாடுகளிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படக் காட்சிகளை பார்த்து கமல் உற்சாகம் : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கிய நிலையில், இடையில் சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் முடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து சென்னை, ஐதராபாத், திருப்பதி போன்ற இடங்களிலும் தைவான், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கில் படம் உள்ளது. இந்தப் படத்தையும் ராம்சரணின் கேம்சேஞ்சர் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கிவந்த ஷங்கர், ராம்சரண் படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் அந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை ஏறக்குறைய நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், இதுவரை நடந்துள்ள தனது போர்ஷனுக்கான டப்பிங்கையும் நிறைவு செய்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் மிகவும் உற்சாகமடைந்துள்ளாராம். இந்தப் படத்தின் முன்பு பாகுபலி, கேஜிஎப் படங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று அவர் தன்னுடைய வியப்பை வெளியிட்டுள்ளாராம்.

Actor Kamal haasan hails Indian 2 movie scenes and says it will set benchmark in indian cinema

மேலும் இந்தப் படம் இந்திய சினிமாவில் பெஞ்ச் மார்க்காக அமையும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளாராம். இந்தியன் 2 படம் ரிலீசானதும் பாகுபலி, கேஜிஎப் படங்ககள் குறித்தெல்லாம் யாரும் இனிமேல் பேசமாட்டார்கள் என்றும் அந்த அளவிற்கு இந்தியன் 2 மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் தன்னை வேறு லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டுள்ளாராம் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது. இந்தப் படத்தில் சேனாபதி, சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். தன்னுடைய மகனாகவே இருந்தாலும் லஞ்சம் வாங்கினால் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. கமலின் மேக்கப், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல இரண்டாவது பாகத்திலும் இந்தக் கேரக்டருக்காக அதன் மேக்கப்பிற்காக கமல் மிகவும் மெனக்கெட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X