Kamal haasan கீர்த்திக்கு அழகோடு அறிவும் இருக்கிறது.. கமல் ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா!

சென்னை : நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க வரும் ஜூன் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது மாமன்னன் படம்.

இந்தப் படம் மாரி செல்வராஜின் அரசியலோடு உதயநிதியின் அரசியலையும் சேர்த்து பேசும் படமாக அமைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் ஆடியோ வெளியீட்டின்போது தெரிவித்திருந்தார்.

மேலும் படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கீர்த்தி இந்த நிகழ்ச்சியில் அழகான காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்திருந்தார்.

Actor Kamal haasan hails Keerthi suresh and her talent in Maamannan audio launch function

நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டிய கமல்ஹாசன் : தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் உதயநிதியின் கடைசி படமாக உருவாகியுள்ளது மாமன்னன் படம். இந்தப் படத்தில் அவருடன் நடிகர் வடிவேலுவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து வெளியாகியுள்ள போஸ்டர்கள் உள்ளிட்டவை மிகவும் அதிகமான கவனத்தை பெற்றன. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் பகத் பாசிலும் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூன் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், பா ரஞ்சித் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று படம் குறித்த எதிர்பார்ப்புகளை பகிர்ந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் கமல்ஹாசன், படத்தின் ஒவ்வொருவருக்கும் பாராட்டு தெரிவித்து பேசினார். இதனிடையே, நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்தும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இருப்பதாக அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். அழகாக இருப்பதற்கு மேக்கப்பை போட்டுக் கொண்டால் போதும் என்றும் குறிப்பிட்டார்.

Actor Kamal haasan hails Keerthi suresh and her talent in Maamannan audio launch function

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அழகோடு அறிவும் சேர்வதுதான் பேரழகு என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், அறிவாகவும் அழகாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அழகோடு அறிவு சேரும்போது, இன்னும் சிறப்பானதாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் அறிவாளி என்பது அவர் தேர்ந்தெடுக்கும் படங்களில் தெரிவதாகவும் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் ஒரு வித்தியாசமான படம் என்று தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்களான வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் தமிழில் தனக்கு கம்பேக்காக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நீண்ட மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நடிப்பில் தமிழ் படம் ரிலீசாவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X