ஆன்மீகத்தைக்கூட ஏற்றுக் கொள்வேன்.. விருது விழாவில் ரஜினி குறித்து பேசிய கமல்ஹாசன்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள். நீண்ட காலங்களாக தங்களுடைய நட்பை இவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

துவக்கத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகியதால், இனி இணைந்து நடிக்கக்கூடாது என்ற முடிவை எடுத்தனர்.

கமல்ஹாசன் -ரஜினிகாந்த் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இணைக்கும், 16 வயதினிலே உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்துள்ளன.

தொடரும் ரஜினி -கமல் நட்பு

தொடரும் ரஜினி -கமல் நட்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அபூர்வ ராகங்கள் படத்தில் இணைந்து நடித்தது முதல் சிறப்பான நண்பர்களாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். பாலசந்தர் பட்டறையில் இவர்கள் இருவரும் நடிப்பை கற்றுக் கொண்டு, சிறப்பான பங்களிப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கிய இவர்கள் இருவரின் பயணம் 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் என சிறப்பான சில படங்களில் இணைந்தே தொடர்ந்தது.

 ரசிகர்களின் பேவரைட் படங்கள்

ரசிகர்களின் பேவரைட் படங்கள்

ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் அதிகரித்ததை பார்த்த இருவரும், இனி இணைந்து நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்து தற்போதுவரை அதில் உறுதியாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அந்த சில படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்ட்டில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். ஒருவர் ஸ்டைல் கிங் என்றால் மற்றொருவர் நடிப்பில் உலக நாயகன் என ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

விடாமல் தொடரும் நட்பு

விடாமல் தொடரும் நட்பு

தொடர்ந்து இருவரும் தங்களது பாதைகளில் பயணம் செய்தாலும் தங்களது நட்பின் சங்கலியை தொடர்ந்து பிடித்துக் கொண்டுள்ளனர். அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் பங்கேற்று ஒருவர் புகழை மற்றவர்கள் பாடுவதையும் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க முடிந்தது.

பொது நிகழ்ச்சிகளில் கமல் -ரஜினி

பொது நிகழ்ச்சிகளில் கமல் -ரஜினி

அப்போது ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களது படங்கள் குறித்தும் நட்பு குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். இவர்கள் இருவரையும் ஒருசேர ஒரு நிகழ்ச்சியில் நீண்ட காலங்களுக்கு பிறகு பார்த்ததில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் இவர்களை ஒருசேர பார்க்க முடிந்தது. அப்போது ரஜினியை பாராட்டிப் பேசினார் கமல்ஹாசன்.

ஆன்மீகத்தைக்கூட ஏற்பேன்

ஆன்மீகத்தைக்கூட ஏற்பேன்

ரஜினி போன்ற ஒரு ஆளை உருவாக்க முடியுமென்றால் ஆன்மீகத்தைக்கூட தான் ஏற்றுக் கொள்வேன் என்று அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். எந்தத் துறையாக இருந்தாலும் இப்படி ஒரு ஆளை உருவாக்க முடியுமென்றால் அது சிறப்பானதே என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டியது. விஜய், வைரமுத்து உள்ளிட்டவர்களும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு ஆரவாரம் செய்தனர்.

அன்பு + மரியாதை

அன்பு + மரியாதை

ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர் கமல்ஹாசன். ஆனால் அவரது ரசிகர்கள் அவரை ஆண்டவராக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் கேரக்டரை பாராட்டும் வகையில் அவரை போன்றவரை உருவாக்குவதில் உதவிபுரியும் என்றால் ஆன்மீகத்தைக்கூட ஏற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது போன்ற பாராட்டுக்களின் மூலம் ஒருவர் மீது மற்றொருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் வெளிப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ட்ரெண்டாகிவரும் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X