இதுபோன்ற தருணங்கள்.. இந்தியன் 2 படத்தை பார்த்த சென்சார் போர்ட் உறுப்பினர்கள்.. கமல் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மிகச் சிறப்பான வரவேற்பையும் வெற்றியையும் குவித்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையிடப்பட உள்ள இந்தியன் 2 படத்திற்காக சர்வதேச அளவில் பட குழுவினர் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இந்தியன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Kamal haasan Indian 2 Shankar 2

இந்தியன் 2 படம்: இந்தியன் 2 படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2வது பாகம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை இந்தியன் 2 படமும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் என படக்குழுவினர் அனைவரும் பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியன் 2 பட பிரமோஷன்: இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் நாளைய தினம் படத்திற்காக ஹைதராபாத்தில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசன், சங்கர் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து கூட்டணியாக பல பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார். படம் குறித்தும் மற்றும் தன்னுடைய பல நிகழ்வுகள் குறித்தும் அடுத்தடுத்த பேட்டிகளை அளித்து வருகிறார்.

சென்சார் போர்ட் அதிகாரிகள்: அந்த வகையில் தற்போது அவர் படத்தினை சென்சார் செய்த அதிகாரிகள் குறித்து பேசியுள்ளார். எப்போதுமே சென்சார் போர்ட் மெம்பர்கள் அதிகமாக படம் குறித்து தங்களது கருத்துக்களை கூற மாட்டார்கள் என்றும் ஏனென்றால் அப்படி அவர்கள் பேசிவிட்டால் அதை வைத்து விமர்சனங்கள் எழும் என்றும் சங்கருக்கு சென்சார் போர்ட் மெம்பர்கள் கருணை காட்டிவிட்டார்கள் என்று விமர்சிக்கப்படும் என்றும் பலவாறு பேசியுள்ளார் கமல்ஹாசன். ஆனால் இந்தியன் 2 படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் இதுபோன்ற பல தருணங்கள் இன்னும் வரும் என்று எதிர்பார்ப்பதாக தனக்கு மெசேஜ் செய்து உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் மகிழ்ச்சி: சென்சார் போர்டு உறுப்பினர்களை கவர்ந்துள்ள இந்தியன் 2 படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அந்த ட்ரெய்லர் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் மிரட்டலாக அமைந்திருந்தது. அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியான நிலையில் சில கலவையான விமர்சனங்களை இந்த பாடல்கள் பெற்றிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X