Just In
- just now
புது வெள்ளை மழை கவர் சாங்… நக்ஷா சரணை பாராட்டிய வைரமுத்து !
- 3 hrs ago
கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
- 3 hrs ago
எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!
- 3 hrs ago
அரசியலில் ராதிகா.. இனிமே சித்தி இவங்கதான்! இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- News
பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரன்வீர் சிங்கின் படத்துக்கு தூதர் ஆன நடிகர் கமல்ஹாசன்... அம்பாசடருக்கும் அளவில்லாத சம்பளமாம்!
சென்னை: ரன்வீர் சிங், ஜீவா நடிக்கும் '83' படத்துக்கு தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட இருக்கிறார். இதற்காக கோடிகளில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.
அவரும் இல்லை.. இவரும் இல்லை.. தளபதி 65 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

சையது கிர்மானி
சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார்.
இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது.

அனுராக் காஷ்யப்
'83' படத்தில் ஜிவாவின் தோற்றம் சமீபத்தில் வெளியானது. மேலும் சிலரின் தோற்றங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்துரியின் விப்ரி மீடியா, அனுராக் காஷ்யப்பின் பான்டோம் பிலிம்ஸ், ரிலையன்ஸ்,நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின் மென்ட், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தூதராக கமல்
ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளனர். இந்நிலையில், 83 படத்தின் அம்பாசடராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோடிகளில் சம்பளம்
இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதற்காக, நடிகர் கமல்ஹாசனுக்கு சில கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.