தம்பி அஜித்தின் அப்பா மறைவுக்கு இரங்கல்... கண்கலங்கிய கமல்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சென்னை: முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்நகர் மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதனையறிந்த நடிகர்கள் விஜய், பார்த்திபன் உள்ளிட்ட பலர் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

அப்பாவை இழந்து வாடும் அஜித்

அப்பாவை இழந்து வாடும் அஜித்

அஜித் குமாரின் அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாகவும் அஜித்தும் அவரது சகோதரர்களும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். மேலும், உடனடியாகவே அஜித் தந்தையின் உடல் பெசன்நகர் மின் மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது. அஜித்தே தனது தந்தையின் உடலை சுமந்து சென்றது வைரலானது.

கமல்ஹாசன் இரங்கல்

கமல்ஹாசன் இரங்கல்

அஜித்தின் அப்பா மறைவு செய்திக்கேட்டதும் அமைச்சரும் நடிகருமான உதயநிதி உடனடியாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், லியோ ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய விஜய், தனது நண்பர் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அஜித் வீட்டிற்கு விஜய் நேரில் சென்றது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரிசையில், நடிகர் கமல்ஹாசனும் அஜித்துக்கு உருக்கமாக ஆறுதல் கூறியுள்ளார்.

தம்பி அஜித்துக்கு ஆறுதல்

தம்பி அஜித்துக்கு ஆறுதல்

அஜித்தின் அப்பா மறைவுக்கு கமல்ஹாசன் தனது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தம்பி அஜித்குமாரின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்துக்கு ஆறுதல் தெரிவித்து கமல் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எளிமையாக நடந்த இறுதி ஊர்வலம்

எளிமையாக நடந்த இறுதி ஊர்வலம்

அதேபோல், நடிகர் சிம்புவும் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக அஜித் தந்தையின் இறுதி ஊர்வலம் அமைதியாகவும் எளிமையாகவும் நடந்து முடிந்தது. சாதாரணமான ஆம்னி வேனில் தான் அஜித் தந்தையின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், சாலையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விரைவாகவும் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பாவின் உடல் தகனம் செய்யப்பட்டதும் அஜித் கண்கலங்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

ரசிகர்கள் கொடுத்த மரியாதை

ரசிகர்கள் கொடுத்த மரியாதை

தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் என அஜித்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்மூலம் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என மறைமுகமாகக் கூறியிருந்தார். இதனை புரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்தின் வீட்டு முன்பு அதிகளவில் கூடாமல் இருந்தனர். இதனால் தான் இறுதி ஊர்வலம் விரைவில் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X