Actor Kamal haasan: கண்மணி அன்போட பாடல் மேக்கிங் ஆடியோ.. ஷேர் செய்து மகிழ்ந்த ரசிகாஸ்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம் குணா. இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற போதிலும் நார்மல் ஆடியன்சை படம் சென்றடையவில்லை. படம் வெளியானபோது ஏராளமான ரசிகர்களை கவரவில்லை என்ற போதிலும் படத்திற்கு எந்த காலத்திலும் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்தப் படம் தற்காலத்திலும் கொண்டாடப்படும் கதையமைப்பையும் திரைக்கதையையும் கொண்டிருந்தது. இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் சிபி மலையில் இயக்கவிருந்த நிலையில் அவரால் இயக்க முடியாத சூழலில் சந்தான பாரதி இந்தப்படத்தை இயக்கினார்.

முன்னதாக மதிகெட்டான் சோலை என்று இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் சந்தானபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தலைப்பில் மாற்றுக் கருத்து இருந்த நிலையில் படத்தில் ஹீரோவின் கேரக்டர் பெயரிலேயே படத்தின் டைட்டில் இறுதியானது. இந்தப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் தன்னுடைய தாயிடமிருந்து தேவதையாக அபிராமி தன்னை மீட்டெடுப்பாள் என்ற நம்பிக்கையுடையவராக குணா என்ற கேரக்டரில் கமல் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வசனங்களை பாலகுமாரன் எழுதிய நிலையில் படத்தின் சிறப்பிற்கு அதுவும் காரணமாக அமைந்தது.

Actor Kamal haasan -Ilayaraja s Kanmani anboda song making audio

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் எப்போதும் சோதனை முயற்சிகளை சிறிதும் யோசிக்காமல் மேற்கொள்வார். அவற்றில் பல ரசிகர்களை சென்றடையாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். அந்த வகையில் கடந்த 1991ம் ஆண்டில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான குணா படமும் ஒன்று. பாலியல் தொழில் செய்யும் தன்னுடைய தாயிடம் இருந்து ஒரு அழகான தேவதை தன்னை மீட்பாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு அபிராமியாகவே தோன்றும் ஒரு பெண், மற்றும் அவர்மீதான குணாவின் காதல் என இந்தப் படத்தின் கதைப்பயணம் சிறப்பாகவே அமைந்திருந்தது.

இயக்குநர் சந்தானபாரதி: இந்தப் படத்தை முன்னதாக சிபி மலையில் இயக்கவிருந்த நிலையில், அவர் மற்ற கமிட்மெண்ட்களில் பிசியானதால் சந்தான பாரதியை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் நடிப்பு, ரோஷினியின் பிரெஷ்னெஸ், குணா குகை, இளையராஜாவின் இசை என இந்தப் படத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. இருந்தபோதிலும் படம் நார்மல் ஆடியன்சை கவரத் தவறியது. வசூலிலும் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் தற்போது 30 ஆண்டுகளை கடந்து இந்தப் படம் ரசிகர்களை கவர காரணமாக அமைந்துள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள படம்.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குணா குகை மற்றும் குணா படத்தின் கண்மணி அன்போட பாடல் சிறப்பான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளையராஜா இசையில் கண்மணி அன்போட காதலன் என்ற பாடல் குணா படத்தின் சிறப்பிற்கு காரணமாக அமைந்தது. இந்தப் பாடலில் தன்னுடைய அன்பை நாயகிக்கு புலப்படுத்தும் வகையில் சாதாரண மனிதன் எப்படி வார்த்தைகளை பிரயோகிப்பான் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் பாடலை ஹீரோவிற்காக நாயகி எழுதுவதாகவும் இந்தப் பாடல் அமைந்தது.

Actor Kamal haasan -Ilayaraja s Kanmani anboda song making audio

கண்மணி அன்போட பாடல் மேக்கிங் ஆடியோ: இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் பாடலின் மேக்கிங் ஆடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் அன்பே அன்பே நீ நலம்தானா என்று வித்தியாசமான டியூனில் இளையராஜா மெட்டமைக்க, அது சிறப்பாக இருப்பதாக கூறும் கமல்ஹாசன், ஆனால் எழுதப்படிக்க தெரியாதவனின் மனதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகளும் எளிமையான மெட்டும் தனக்கு தேவை என்று கமல் கூறுவதாக இந்த மேக்கிங் ஆடியோவில் காணப்படுகிறது. தொடர்ந்து நேரடியாக ரெக்கார்டிங் தியேட்டருக்கு வர சொல்லும் இளையராஜா, அந்தப் பாடலை வடிவமைப்பதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X