பிறந்த நாள் அதுவுமா… கமல் கொடுத்த சர்ப்ரைஸ்.. மகிழ்ச்சியில் சாய் பல்லவி !

சென்னை : இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகை சாய்பல்லவிக்கு நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க உள்ளார்.

Actor Kamal Haasan is the biggest surprise for actress Sai Pallavi

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சாய்பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷ் மற்றும் சூர்யாவின் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்களெல்லாம் தோல்வியை தழுவியதால் தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார். சாய் பல்லவிக்கு தெலுங்கில் தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் அங்கு ராசியான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.

Actor Kamal Haasan is the biggest surprise for actress Sai Pallavi

தற்போது அம்மணி தான் தெலுங்கில் டாப் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சாய்பல்லவி தெலுங்கில் அவர் நடிப்பில் தற்போது விராட பருவம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. நடிகை சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் சாய்பல்லவிக்கு அவரது ரசிகர்கள் , திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர. இந்நிலையில், நடிகை சாய் பல்லவிக்கு நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க உள்ளார். அது என்னவென்றால், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்.கே.21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

Recommended Video

என் life-ல Miracle நடந்திருக்கு|Janani Iyer speech |Filmibeat Tamil

ஆனால், கடந்த சில நாட்களாக சாய்பல்லவி திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சாய்பல்லவியோ நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், டோலிவுட் வட்டாரமே சாய்பல்லவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் இதனால்தான் படங்களில் கமிட்டாகாமல் இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X