Vijay: லியோ படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. ரசித்து பார்த்த விஜய்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள படம் லியோ.
இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகும் படங்களில் லியோவும் ஒன்று. அடுத்த மாதம் 19ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் அடுத்தடுத்த கிளிம்ப்ஸ் வீடியோக்கள், பாடல் என வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் காட்டி வருகிறது.

லியோ படத்தில் இணைந்த கமல்ஹாசன்: நடிகர் விஜய், த்ரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இதுபோல படத்தில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ ஏராளமான அம்சங்கள் உள்ளன. படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் விஜய். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், போஸ்டர்கள், சிங்கிள் என வெளியாகி ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளன.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கியது. டைட்டில் டீசருடன் படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டு, காஷ்மீரில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. மிகுந்த குளிர், நிலநடுக்கத்திற்கிடையில், படக்குழுவினர் காஷ்மீரில் சூட்டிங் நடத்தினர். இதன் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அவ்வப்போது படத்தின் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில், விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் என அடுத்தடுத்த படத்தின் நடிகர்களின் பிறந்தநாட்களையொட்டி படத்தின் போஸ்டர்கள், படத்தின் சிங்கிள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தின. இந்நிலையில் இன்றைய தினமும் படத்தின் இரண்டாவது சிங்கிள் லிரிக் வீடியோவாக வெளியாகி சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் அவர்கள் உற்சாகமாகவே உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படம் எல்சியூவில் இணைந்துள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் மற்றும் கமல்ஹாசன் இணைந்து சென்னையில் பிரபல டப்பிங் ஸ்டூடியோவில் காணப்பட்டனர். இவர்களுடன் விஜய்யும் உடனிருந்தார்.
இதையடுத்து படத்தின் அறிமுகக்காட்சிகளில் கமல்ஹாசன் பேசியுள்ளாரா அல்லது எல்சியூவில் இணையும்வகையில் அவர் டப்பிங் பேசியுள்ளாரா என்பது குறித்த தகவல்களை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். லோகேஷ் -கமல் இணைந்திருந்த இந்த சந்திப்பின்போது நடிகர் விஜய்யும் உடனிருந்தார். இந்த நிகழ்வின்போது கமலின் டப்பிங் பணிகளை விஜய் ரசித்து பார்த்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











