Kamal haasan :பொன்னியின் செல்வன் 2 படத்தில் கமலும் இருக்காராம்.. வெளியான தகவல்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. ரயில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

Actor kamal haasan joined Ponniyin selvan 2 movie as well

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இணைந்த கமல் : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமல்ஹாசன் கமிட்டாகி வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்குகள் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

தற்போது வெளிநாடுகளில் படக்குழுவினர் சூட்டிங்கை எடுத்து வருகின்றனர். தைவானில் முதல் கட்டமாக 4 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. பிரிட்டிஷ் காலகட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில், அதிரடி ரயில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் கமல் இருக்கும்படியான அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஷங்கரின் புகைப்படங்களும் வெளியாகின. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமல்ஹாசன் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் மற்றவர்களின் படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் சித்தார்த்தின் சித்தா படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.

Actor kamal haasan joined Ponniyin selvan 2 movie as well

கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டில் ரஜினியுடன் கலந்துக் கொண்ட கமல்ஹாசன், சமீபத்தில் நடைபெற்ற படத்தின் இரண்டாவது பாகத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டிலும் சிம்புவுடன் இணைந்து பங்கேற்றார். இதன்மூலம் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தில் படத்திற்காக பின்னணியில் பேசியிருந்தார் கமல்ஹாசன், இந்த விஷயமும் முதல் பாகத்தில் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் இரண்டாவது பாகத்திலும் பின்னணியில் கமல்ஹாசன் பேசியுள்ளதாக படத்தின் இயக்குநர் மணிரத்னம் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயமும் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. முந்தைய பாகத்தை போலவே, இரண்டாவது பாகத்திலும் தன்னுடைய பின்னணியால் கமல்ஹாசன் ரசிகர்களை அதிகமாக கவர்வார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, அடுத்தடுத்த படங்களில் கமிட்டானாலும் எப்படி பின்னணி, பிக்பாஸ் போன்ற விஷய்ஙகளிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்துகிறார் என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X