Kalki 2898 AD movie: கல்கி 2898 AD படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியான கமல்.. ட்ரெயிலரில் வருவாரா?
சென்னை: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளள படம் கல்கி 2898 AD. இந்த படம் இம்மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்த படத்திற்கான எதிர்பாப்பு மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக களமிறங்கியுள்ளதும் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் தற்போது கமல்ஹாசன் பிசியாகியுள்ளார். அடுத்தடுத்து தேர்தல் வேலைகள், இந்தியன் 2 பட வேலைகள், தக் லைஃப் பட சூட்டிங் என பிசியாக இருந்த கமல்ஹாசன் தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷனிலும் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளன. அடுத்த மாதத்தில் அவரது இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. படத்தின் அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இதை தொடர்ந்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள கல்கி 2898 AD படத்திலும் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூழலில் படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளார்.
வில்லனாக கமல்ஹாசன்: நீண்ட காலங்களுக்குப் பிறகு கமல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள சூழலில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் தற்போது கமல்ஹாசன் பிஸியாகியுள்ளார். இந்த படத்தின் டப்பிங்கில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக படத்தில் கமலின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி ஏராளமான எதிர்பார்ப்பை இந்த கேரக்டருக்காக உருவாக்கியுள்ளது.
டப்பிங்கில் கமல் பிசி: இந்நிலையில் தற்போது கமல் டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரும் ஜூன் மாதம் 10ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ட்ரெயிலரில் கமல்ஹாசன் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் பகுதியாக படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு சூழலையும் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். இதையொட்டி படத்தின் ட்ரெயிலரும் பிரம்மாண்டமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
பான் இந்தியா படம்: பான் இந்தியா படமாக வெளியாகும் கல்கி 2898 AD படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மகாபார கதையையும் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியையும் கலந்து கற்பனை கதையுடன் இந்தப் படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். படத்தின் முக்கியமான கேரக்டரில் கார் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரை வைத்து சில தினங்களுக்கு முன்னதாக பிரமோஷனும் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











