Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?

டெல்லி: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக ஜெய்சல்மாரில் நடந்து வந்த சூழலில் இன்றைய தினம் டெல்லியில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. டெல்லியில் வெயில் அதிகமாக உள்ள சூழலில் தொடர்ந்து 20 நாட்கள் சூட்டிங்கை இயக்குநர் மணிரத்னம் அங்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூட்டிங்கில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ள சூழலில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இங்கே திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் அடுத்ததாக செர்பியாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய படங்களை எப்போதும் சரியாக திட்டமிட்டு குறைந்த காலத்திலேயே நிறைவு செய்யும் வழக்கமுடையவர் மணிரத்னம். ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் அதிக நாட்களை எடுத்து வருகிறது.

Actor Kamal haasan joins Thug life movie Delhi schedule tomorrow

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் தக் லைஃப். இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாக சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. செர்பியாவில் கடந்த மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக கமல்ஹாசன், இந்த சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் படத்தின் சூட்டிங் ஜெய்சல்மாரில் கடந்த சில தினங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. இதையடுத்து இன்றுமுதல் டெல்லியில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை மணிரத்னம் துவங்கியுள்ளார்.

டெல்லியில் துவங்கிய சூட்டிங்: டெல்லியில் தொடர்ந்து 20 நாட்கள் நடக்கவுள்ள இந்த சூட்டிங்கில் சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் நாளை முதல் இந்த ஷெட்யூலில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் 200க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகளை இந்த ஷெட்யூலில் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரெட் போர்ட் முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைகவர்ந்து வருகின்றன. மேலும் தக்ளாகாபாத் போர்ட், பாட்டாடி பேலஸ், பழைய டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Actor Kamal haasan joins Thug life movie Delhi schedule tomorrow

கமல்ஹாசன் -சிம்பு காம்பினேஷன் காட்சிகள்: கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி நாயகன் படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே திரிஷா, சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகிவரும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மீண்டும் இணைந்த சிம்பு -திரிஷா ஜோடி: சிம்பு நடிகர் கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங் 2 முதல் 3 மாதங்கள் எடுக்கப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெயம்ரவி, துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில், அவர்கள் மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் சிம்புவும் திரிஷாவும் ஜோடி சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதும் மிகப்பெரிய அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X